எலும்பே இல்லாத சுறா மீன் எப்படி வாழ்கிறது? ஷாக்கிங் உண்மைகள் இதோ!

கிரி கணபதி

சுறா மீன்கள் கடலின் மிகப்பெரிய வேட்டைக்காரர்கள். இவற்றைப் பற்றிய பல சுவாரசியமான, ஆச்சரியமூட்டும் உண்மைகளை இங்கே காண்போம்.

Shark

1. சுறாக்களுக்கு உடலில் எலும்புகள் கிடையாது. இவற்றின் உடலமைப்பு முழுவதும் மென்மையான குருத்தெலும்பைகளால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.

Shark Teeth

2. இவை கடலில் எப்போதும் நீந்திக்கொண்டே இருக்க வேண்டும். நீந்துவதை நிறுத்தினால் இவற்றால் சுவாசிக்க முடியாமல் மூழ்கிவிடும்.

Shark

3. சுறாக்களின் பற்கள் தொடர்ந்து விழுந்து முளைக்கும். வாழ்நாளில் சுமார் முப்பதாயிரம் பற்களை இவை உருவாக்குகின்றன.

Shark

4. பல சுறாக்களுக்கு இயல்பாகவே பார்வைத்திறன் மிகவும் குறைவு. ஆனால் இவற்றின் மோப்ப சக்தி மிகச் சிறப்பாகச் செயல்படும்.

Shark Eyes

5. இவை டைனோசர்களை விட பழமையான உயிரினங்கள். சுமார் 450 மில்லியன் ஆண்டுகளாகப் பூமியில் வாழ்ந்து வருகின்றன.

Dinosaurs

6. சில சுறாக்கள் இருட்டிலும் ஒளிரும் தன்மை கொண்டவை. இது கடலடியில் இரையை ஈர்க்கப் பெரிதும் உதவுகிறது.

Shark

7. ஒரு சொட்டு இரத்தத்தின் வாசனையை இவை எளிதில் கண்டுபிடிக்கும். பல மைல்கள் தொலைவிலிருந்தும் ரத்தத்தை அறியும் திறன் பெற்றவை.

Blood

8. சுறாக்கள் மனிதர்களை விரும்பி வேட்டையாடுவதாக நம்பப்படுவது தவறு. இவை மனித மாமிசத்தை எப்போதுமே உணவாக ஏற்பது கிடையாது.

Shark Attack

9. திமிங்கல சுறாக்கள் தான் கடலின் மிகப்பெரிய மீன். இவை மிகவும் சாதுவான மற்றும் அமைதியான குணமுடையவை.

Whale Shark

10. இவை உறங்கும்போது கூடப் பாதி மூளை விழித்திருக்கும். இதனால் எந்தவொரு சிறிய ஆபத்தையும் மிக எளிதில் உணர்ந்துகொள்ளும்.

Shark

கடலின் இயற்கை சமநிலையைப் பேணுவதில் சுறாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றை அழிவிலிருந்து பாதுகாப்பது மிக அவசியமாகும்.

Shark
Beauty Tips
முகம் சுருக்கமின்றி, பளபளப்பாக இருக்க ஐஸ் க்யூப் தெரபியை எப்படிச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்?