கிரி கணபதி
ஜெல்லி மீன்கள் கடலில் வாழும் மிகவும் அழகான, ஆபத்தான உயிரினங்கள். பார்ப்பதற்கு எளிமையாகத் தெரியும் இவற்றுக்குள் ஒளிந்திருக்கும் ஆச்சரியமான 10 உண்மைகளை இங்கே.
1. ஜெல்லி மீன்களுக்கு மூளை, இதயம், நுரையீரல் மற்றும் எலும்புகள் என எதுவும் கிடையாது. இவற்றின் உடலில் உள்ள நரம்பு வலைப்பின்னல் மூலமாகவே இவை செயல்படுகின்றன.
2. இவை டைனோசர்கள் தோன்றுவதற்கு முன்பே இந்த பூமியில் வாழ்ந்து வருகின்றன. சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக இவை கடலில் வசித்து வருகின்றன என்பது வியக்கத்தக்கது.
3. ஜெல்லி மீன்களின் உடல் 95% தண்ணீரால் ஆனது. இதனால்தான் இவை சூரிய வெப்பத்தில் கரையில் ஒதுங்கும்போது, ஆவியாகி மறைந்து விடுகின்றன.
4. 'Turritopsis dohrnii' என்ற ஒரு வகை ஜெல்லி மீனுக்கு இயற்கையான மரணமே கிடையாது. இவை வயதானால் மீண்டும் தங்கள் இளமை பருவத்திற்கே திரும்பிவிடும் ஆற்றல் கொண்டவை.
5. 1990-களில் NASA ஜெல்லி மீன்களை விண்வெளிக்கு அனுப்பியது. ஆச்சரியப்படும் விதமாக, அவை விண்வெளியிலும் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்தன.
6. Box Jellyfish உலகின் மிக ஆபத்தான உயிரினங்களில் ஒன்று. இதன் விஷம் ஒரே நேரத்தில் பல மனிதர்களைக் கொல்லும் அளவுக்கு வீரியம் மிக்கது.
7. பல ஜெல்லி மீன்கள் இருட்டில் தானாகவே ஒளிரும் தன்மை கொண்டவை. எதிரிகளை பயமுறுத்தவும், இரையை ஈர்க்கவும் இவை வெளிச்சத்தை உமிழ்கின்றன.
8. இவற்றுக்கு வாய் மற்றும் கழிவு வெளியேற்றும் உறுப்பு இரண்டுமே ஒன்றுதான். உணவை உண்பதும், செரிமானத்திற்குப் பின் கழிவை வெளியேற்றுவதும் ஒரே துவாரம் வழியாகவே நடக்கும்.
9. ஒரு ஜெல்லி மீனை இரண்டாக வெட்டினால் அது இறக்காது. மாறாக, வெட்டப்பட்ட இரண்டு துண்டுகளும் வளர்ந்து இரண்டு புதிய ஜெல்லி மீன்களாக மாறிவிடும் திறன் கொண்டவை.
10. Lion’s Mane வகை ஜெல்லி மீன்களின் Tentacles, நீலத் திமிங்கிலத்தை விட நீளமாக வளரக்கூடியவை.