வாசுதேவன்
பல்லி இனத்தைச் சார்ந்த இவை பெரும் பாலும் காணப்படுவது காட்டுப் பகுதிகளில். உடும்புகளில் 80 வகைகள் உள்ளன.
மிகச் சிறிய மற்றும் பிரம்மாண்டமான உடும்புகளும் உள்ளன.
உடும்புகள் அதிகம் ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா போன்ற இடங்களில் வசிக்கிறன.
இவை நிலங்களிலும், நீர் நிலையை ஒட்டியும் காணப்படும்.
புத்திசாலியான இந்த உடும்பு இனம், நீரில் வெகு வேகமாக நீந்த கூடியவை. அவற்றின் நீளமான வால்கள் துடுப்பு போல் உதவுகின்றன. நிலத்திலும் வேகமாக நகரும் தன்மை கொண்டவை.
இவைகள் பெரும்பாலும் சிறிய வகை ஊர்வன, பறப்பன, மீன்கள் போன்றவற்றை உண்பவை. காய்கள், பழங்கள் உண்ணும் உடும்பு வகைகளும் உண்டு.
உடும்புகள் முட்டை இடும் வகையை சார்ந்தவை. 7 முதல் 37 முட்டைகள் இடும்.
உடும்புக்களின் மாமிசத்தில் மருத்துவ சக்தி இருப்பதாக நம்பப்படுவதால் இவற்றை வேட்டையாடி உண்பவர்கள் உலகின் சில பகுதிகளில் உள்ளனர்.
மேலை நாடுகளில் உடும்புகளில் சில வகைகளை செல்ல பிராணியாக வளர்த்து வருகின்றனர்.
வளர்க்கப்படும் உடும்புகள் 20 வருடங்கள் வரையில் உயிர் வாழும்.
இவற்றின் நாக்குகளும், வால்களும் மிக நீளமானவை.
உடும்புகளுக்கு பாம்பின் நாக்கு போல் இரண்டாக பிளந்து இருக்கும். நாக்கை வெளியே நீட்டி சுற்றுப்புறம், எதிரிகளினால் ஆபத்து இவற்றை உணர்ந்து காத்துக் கொள்ள முடிகின்றது.
நீண்ட வால்கள் வலிமை மிக்கவை. எதிரிகளை தாக்க உதவுகின்றன.
பிடிவாத குணம் கொண்ட உடும்புக்களின் பிடி மிகவும் உறுதியானது.