அலுவலகத்தையும் வீட்டையும் அழகாக்கும், மன அழுத்தத்தைப் போக்கும் செடிகள்..!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

அலங்காரச் செடிகள் முதல் அவசியமான செடிகள் வரை விதவிதமாக வளர்க்கும் ஆசை உள்ளவரா நீங்கள்? இதைக் கட்டாயம் படியுங்க!

Home Plants | Imge Credit: Pinterest

சில செடிகளை நாம் வீட்டின் உட்புறத்தில் வளர்க்க அவை நம் வீட்டை அழகுபடுத்துவதுடன் மன அழுத்தத்தையும் குறைத்து, நம்மை நல்ல மனநிலையில் வைத்திருக்க உதவும். 

Home Plants | Imge Credit: Pinterest

அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் பால்கனிகளிலும், சமையலறை, கம்ப்யூட்டர் டேபிள், குளியலறை என பல இடங்களில் தொட்டிகளை வைத்து வளர்க்கின்றனர்.

Home Plants | Imge Credit: Pinterest

நாம் என்ன செடிகள் வாங்கப் போகிறோம் என்பதை முடிவு செய்து அதற்கு ஏற்ற சூழ்நிலை, எப்படிப் பராமரிப்பது என்று தெரிந்து அவற்றை கடைகளில் சென்று வாங்கலாம்.

Home Plants | Imge Credit: Pinterest

செடிகளை வாங்கி தொட்டியில் வைப்பதுடன் நில்லாமல், அதற்கு அழகு சேர்க்க செடியின் அடிப்பகுதிகளில் கூழாங்கற்களைப் போட்டு வைக்க, எளிமையானதாகவும் அதே சமயம் மிக அழகானதாகவும் தோன்றும்.

Home Plants | Imge Credit: Pinterest

தினமும் செடிகளுக்குத் தண்ணீரை அதன் இலைகளில் ஸ்பிரே செய்ய, இலைகளில் இருக்கும் தூசிகள் நீங்கி பளிச்சென இருக்கும்.

Water Spray | Imge Credit: Pinterest

சூரிய ஒளி தேவைப்படும் செடிகளை வாரம் ஒரு முறை சூரிய ஒளி படுமாறு வெளியில் வைத்து எடுக்கலாம்.

Plant In Sun Rays | Imge Credit: Pinterest

செடிகளை பூச்சிகள் தாக்காமல் இருக்க இயற்கையான பூச்சி விரட்டிகளை ஸ்பிரே செய்யலாம்.

Pesticides | Imge Credit: Pinterest

சில செடிகளை வளர்ப்பது எளிது. அதிக பராமரிப்பு தேவைப்படாத செடிகளை வாங்கலாம். மணி பிளான்ட் செடி இந்த வகையைச் சார்ந்தது.

Money Plants | Imge Credit: Pinterest

அத்துடன் மன அழுத்தத்தைப் போக்கும் செடிகளும் கிடைக்கின்றன. ஸ்பைடர் பிளான்ட், பீச் லில்லி, சைனீஸ் எவர்கிரீன், ரேபிஸ் பாம்(rhapis palm) போன்ற செடிகள் நம் மன அழுத்தத்தைப் போக்கும் செடிகளாகும்.

Rhapis palm | Imge Credit: Pinterest

துளசியில் ஆன்டிஹைபோக்சிக் விளைவு இருப்பதால், சுற்றுச்சூழலை புத்துணர்வுடன் வைத்திருக்க உதவும். இவற்றை வீட்டில் வளர்ப்பதால் பாசிட்டிவ் வைப்ரேஷன் இருக்கும்.

Tulsi Plants | Imge Credit: Pinterest

லாவண்டர் செடியின் அழகிய பர்பிள் நிற பூக்களில் இருந்து வரும் மென்மையான வாசனை நம் மன பதட்டத்தைப் போக்கி மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது.

Lavender Plants | Imge Credit: Pinterest

மல்லிகை பூக்கள் நம் மனநிலையை மாற்றும் சக்தி கொண்டவை. அதன் சுகந்தமான மணம் நம் மனதை லேசாக உணர வைக்கும்.

Jasmine Plants | Imge Credit: Pinterest

புதினா செடிகளில் இருக்கும் மெந்தாலில் நம் மன அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகள் நிறைய உள்ளன.

Pudhina Plants | Imge Credit: Pinterest

இப்படிப் பார்த்து பார்த்து செடிகளை வளர்த்தால் நம் மன அழுத்தம் வெகுவாக குறைவதுடன் உற்சாகமும் புத்துணர்ச்சியும் கூடும்.

Home Plants | Imge Credit: Pinterest
Rhinoceros