கரடிகள் பற்றிய சில தகவல்கள்!

வாசுதேவன்

ஒரு காலத்தில் நம் ஊர்களில் வீதிகளுக்கு அழைத்து வந்து வித்தை காட்ட உபயோகப் படுத்தப்பட்டன கரடிகள். கரடிகள் பற்றி சில விவரங்கள்.

Bear | Imge Credit: Pinterest

கரடிகள் ஆக்ரோஷமானவை. கருப்பு, வெண்மை, பிரவுன், பழுப்பு நிறங்களில் காணப்படும். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவிலும் கரடிகள் இல்லை.

Bear | Imge Credit: Pinterest

துருவ பகுதிகளில் வசிக்கும் எஸ்க்கிமோக்களின் மொழியில் ஆர்க்டோஸ் என்றால் கரடிகள் பிரதேசம் என்று பொருள். அதிலிலிருந்து தான் வட துருவப் பகுதி 'ஆர்ட்டிக்' என்று அழைக்கப் படுகின்றது.

Bear | Imge Credit: Pinterest

கரடிகளின் பார்வை திறன் குறைவு. கண்கள் சிறிதாக இருக்கும். காதுக்கள் பெரிதாகக் காணப்படும்.

Bear | Imge Credit: Pinterest

இவைகளுக்கு 42 பற்கள் உள்ளன. இரண்டு கால்களால் நிற்கும் திறமை கொண்டவை.

Bear | Imge Credit: Pinterest

வேட்டையாடவும், எதிரிகளை தாக்க கால்களின் நீண்டு வளைந்துள்ள கூரான நகங்கள் உதவுகின்றன. உடல் முழுவதும் அடர்த்தியான ரோமங்கள் இருக்கும்.

Bear | Imge Credit: Pinterest

மோப்ப சக்தியும், கேட்கும் சக்தியும் கொண்டவை. மணிக்கு 35 மைல் வேகத்தில் கருப்பு நிறக் கரடிகளால் ஓட முடியும்.

Bear | Imge Credit: Pinterest

ஓய்வு எடுக்காமல் சுமார் 100 மைல்களை கடக்கும் தனி திறமை கொண்டவை பனிக் கரடிகள்.

Bear | Imge Credit: Pinterest

கரடிகளால் வேகமாக நீந்தவும், மரம் ஏறவும் முடியும்.

Bear | Imge Credit: Pinterest

சராசரியாக நான்கு அடி உயரம், 115 கிலோ எடை இருக்கும். தோல், கணையம் மருத்துவ குணம் உள்ளதாக நம்பப்படுவதால், கரடிகள் வேட்டையாடப்பட்டு வருகின்றன.

Bear | Imge Credit: Pinterest

கோடை காலங்களில் இனப் பெருக்கத்தில் ஈடு படுகின்றன. கர்ப்ப காலம் ஏழு மாதங்கள்.

Bear | Imge Credit: Pinterest

ஒரு முறையில் ஒன்று, இரண்டு குட்டிகள் பிறக்கும். அவற்றை பராமரிப்பது தாய் கரடி. குட்டிக்களை சுமார் 3 வருடங்கள் வரையில் பாதுகாக்கும்.

Bear | Imge Credit: Pinterest

துருவ பிரதேச கரடிகள் பெரும்பாலும் குளிர்காரணமாக உறங்கிய படியே இருக்கும்.

Bear | Imge Credit: Pinterest

பெரும்பாலான கரடிகள் மீன்கள், இறைச்சி இவற்றை உண்ணும். செடிகள், பூச்சிகளை உண்ணும் கரடிகளும் உள்ளன. தேன், நாவல் பழங்களை கரடிகள் மிகவும் விரும்பி உண்ணும். இரவு நேரங்களில் பொதுவாக இரை தேடும்.

Bear | Imge Credit: Pinterest

வலிமையான நகங்களால் கரையான், எறும்பு புற்றுக்களை தோண்டி எடுக்கும்.

Bear | Imge Credit: Pinterest

கரடியால் மற்ற ஒரு கரடியின் முகத்தை அடையாளம் கண்டு கொள்ள முடியும். கரடிகள் சந்தர்ப்பத்திற்கு தக்கவாறு வித்தியாசமான பல வித சப்தங்களை எழுப்ப வல்லது. எட்டு வகை கரடிகளில், இந்தியாவில் நான்கு வகைகள் உண்டு.

Bear | Imge Credit: Pinterest
Mahavir Quotes | Imge Credit: Pinterest
Mahavir Quotes: மகாவீரர் பொன் மொழிகள்..!