வாசுதேவன்
மகாவீரர் பொன்மொழிகள் எளிமையானவை, வலிமையான பொருள் கொண்டவை. அவற்றில் இருந்து சில...
உண்மையின் பாதையில் நடப்பவர்களுக்கு எந்த உபதேசமும் தேவையில்லை.
ஏமாற்றுதல் என்பது மிகச்சிறிய முள். பழகி விட்டால் அதை பிடுங்கி எறிவது கடினம்.
அகந்தையை அழித்து விட்டால் அடக்கம் தானாகவே
வந்து விடும்.
மன்னிப்பது தைரியத்தால் அலங்கரிக்கப்பட்ட மலர் மாலை.
பெற்றுக் கொள்பவர்களை விட, கொடுப்பவர்களே மகிழ்ச்சி மிக்கவர்கள்.
பயப்படுபவன் பிறரரையும் பயப்பட செய்வான்.
நல்லெண்ணம் என்னும் சிறிய விதை மரமாகி நிழல் தரும் பொழுது பலன் அளிக்கும்.
மன நோய் சில மனிதர்களால் வருகின்றது.
நல்ல செயல்களையே நாம் செய்ய வேண்டும்.
இன்சொல் கூறுபவர்களை பிறர் மதிப்பர்.
பேராசை அழிவிற்கு வழி வகுகின்றது.
அனைவரிடமும் அன்புடனும், கருணையுடனும் இருக்க வேண்டும்.
வாழ்வதோடு, பிறரையயும் வாழ விட வேண்டும்.
எனக்கு எதிரிகளே கிடையாது. எல்லோரும் நண்பர்களே.
பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் விளைவிப்பதை தவிர்க்கவும்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here