வாசுதேவன்
உலகில் உள்ள விலங்குகளில் மிக உயரமான ஒட்டகச் சிவிங்கிகள் குறித்து சில தகவல்கள்.
நமது நாட்டிற்கு சுமார் 150 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் அறிமுக படுத்தப்பட்டது. ஆப்ரிக்கா காட்டு பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் வசிப்பவை.
கூட்டமாக் காணப்பட்டும். நின்ற நிலையில் தூங்கும் திறன் படைத்தது. உயரமான மரங்களின் இலைகள், தாவரங்களை உண்ணும். அவைகளில் இருக்கும் நீர் சத்து உதவுதால் அடிக்கடி நீர் அருந்தாது.
உயரம் அதிகம் போல் எடையும் அதிகம். ஆண், 18 அடிக்கு மேலும் பெண் 15 அடிக்கு மேலும் வளரும். எடை சராசரி 1200 கிலோ (ஆண்) 850 கிலோ (பெண்). வருடங்கள் கூடும் பொழுது அவைகளின் எடைகளும் கணிசமாக அதிகரிக்கும்.
நின்று கொண்டே குட்டிப் போடும். பிறந்த குட்டி சுமார் ஆறு அடி இருக்கும். 100 கிலோ எடை.
ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தில் ஏழு நீளமான எலும்புக்கள் உள்ளன. இவை தலையின் உதவி கொண்டு சண்டை போடும். இவைகளின் இதயம் சுமார் 10 கிலோ எடை கொண்டது.
இவை குட்டிக்களை தாக்க வரும் சிங்கம், கழுதை புலி போன்ற மிருகங்களை பின்னங் கால்களால் எட்டி உதைக்கும்.
நான்கு வகைகள். வடக்கு, தெற்கு, மாசாய், ரெட்டிகுலெட்டட் எனப்படும். பிரவுன் நிற புள்ளிகள் உடலில் காணப்படும். ஒவ்வொரு ஒட்டகச்சிவிங்கியின் புள்ளிகளும் மாறுபட்டு இருக்கும்.
கால்கள் நீளமாக இருப்பதால் இவை ஓடும் பொழுது அதிக இடத்தை வேகமாக கடக்கும் சக்தி கொண்டவை. கண்கள் கூரிய பார்வையும், உயரமும் தூரத்தில் தெரியும் விலங்குகள் வருகையை கணித்து பாதுகாத்துக் கொள்ள இயலும்.
மணிக்கு சுமார் 60 கிலோ மீட்டர் வேகம் ஓடும். ஒரு நாளைக்கு சுமார் 45 கிலோ அளவில் இலைகள் உண்ணும்.
மிருக காட்சி சாலையில் பாதுகாக்கப் படுவதால் அங்கு சராசரியாக 27 வருடங்கள் உயிர் வாழும்.
வட அமெரிக்கா, ஐரோப்பாவில் பல மிருக்காட்சி சாலைகளில் அதிகமான எண்ணிக்கைகளில் ஒட்டகச்சிவிங்கிகள் பராமரிக்கப் படுகின்றன.
நமது நாட்டின் கொல்கத்தா, மைசூரூ மிருக்காட்சி சாலைகளில் அதிக எண்ணிக்கை ஒட்டகச்சிவிங்கிகளை காணலாம்.
காடுகளில் இவை வாழ்வது அவற்றை விட சிறிது குறைந்த வருடங்களே.
ஓவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 21 ஆம் தேதி, உலக ஒட்டகச்சிவிங்கிகள் தினமாக கொண்டாடப் படுகின்றது.