வாசுதேவன்
இவை மலேசியா, இந்தோனேஷியா, போர்னியோ மற்றும் சுமத்ரா மழை காடுகளில் காணப்பட்டவை.
பல மில்லியன் வருடங்களாக பூமியில் வாசம் செய்யும் குரங்கு இனத்தை சார்ந்தவை இவை. சிவப்பு, கருப்பு, பிரவுன், மஞ்சள் கலவை நிறம் கொண்டவை.
வயதாக தோற்றத்தில் வித்தியாசம் தெரியும். கன்னப் பகுதிகளில் சுருக்கும் ஏற்பட்டு தொங்கும். கைகள் நீளமாகவும், வளைந்து கொக்கிகள் போல் தோற்றம் அளிப்பவை. நான்கு விரல்கள் இருக்கும்.
பெரிய வாலில்லாத மனித குரங்கு ஆகும். இந்த விலங்கு புத்திசாலியானது. பெரும்பாலும் மரங்களிலேயே இருப்பவை.
ஆண் ஓராங்குட்டான்கள் 75 கிலோவும், பெண்கள் சராசரி 37 கிலோவும் எடை கொண்டவை ஆகும். ஆண்கள் குரங்குகள் சுமார் 54 அங்குலம் (137 செ மீ) பெண் குரங்குகள் சுமார் 45 அங்குலம் (115 செ மீ) உயரம் வளரும்.
மிக முக்கிய உணவு பழங்கள். மர, செடி தண்டுகள், இலைகள், தேன், பூச்சிகள் இவைகளையும் புசிக்கும் தன்மை கொண்டவை.
இவை பெண் குரங்குகளை ஈர்க்க வித்தியாசமான பெரிய சப்தத்தை உண்டு செய்யும்.
இவை சாமர்த்தியம் மிக்கவை. இரவு படுத்து உறங்க பெரிய மரங்களில் இலைகள், தழைகள், மர கிளைகள் உதவியுடன் படுக்கை வசதி செய்துக் கொள்ளும்.
தாய் குரங்குகள் இவ்வாறு தயார் செய்வதை, வளர்ந்து வரும் குட்டிகள் கூர்ந்து கவனித்து கற்றுக் கொள்ளும் திறமை படைத்தவை.
ஓராங்குட்டான்கள் அழிந்து வரும் வகையில் சேர்க்கப் பட்டுள்ளன.
வேட்டை ஆடுவதாலும், பனை மரங்கள் எண்ணெய் (Palm oil) உற்பத்தி அதிகரிக்க அழிக்கப்படுவதாலும், காடுகள் விஸ்தாரம் குறைந்து வருவது ஓராங்குட்டான்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு தடையாகயுள்ளது.
அழிந்து வரும் ஓராங்குட்டான் களுக்காக போர்னியோவில் பல காப்பாற்றி வளர்க்கப்படும் காப்பகங்கள் உள்ளன.
ஓராங்குட்டான் என்ற சொல் மலாய் மொழியிலிருந்து வந்தது.
ஓராங் என்றால் நபர் என்றும், ஹூட்டான் என்றால் காடு என்றும் பொருள் கொண்டவை.