வாசுதேவன்
அதிகமான வருடங்கள் இவை உயிர் வாழும் தன்மை கொண்டவை. நீரிலும், நிலத்திலும் வலம் வருபவை.
ஆமைகள் ஊர்வன பிரிவைச் சார்ந்த விலங்குகள். மேல் பகுதியில் கடினமான ஓடு இவற்றை பாதுகாக்க உதவுகின்றது.
ஆபத்துக்கு ஏற்ப தலையை உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளும்படி படைக்கப் பட்ட உயிரினம்.
மெதுவாக தரையில் நகர்ந்து செல்லும் இவை, நீரில் வேகமாக நீந்தியும், மிதந்தும் செல்லும் காட்சி நன்றாக இருக்கும்.
இவை மிருகக்காட்சி சாலைகள், மீன்கள் காட்சியகங்களான அக்வெரியம், வீடுகளில் பெரிய கண்ணாடி தொட்டிகளிலும் வளர்க்கப் பட்டு வருகின்றன.
356 இனங்கள் இருப்பதாக கூறப் படுகன்றது. பல உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பே இந்த ஆமைகள் பூவுலகில் ஜீவித்து வந்தன.
இவை குளிர் ரத்த விலங்குகள். எனவே உடல் வெப்ப நிலையை சூழ் நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும்.
பெரிய வகை ஆமைகள் 6.6 அடி நீளம் வளரும். 900 கிலோ எடை இருக்கும். சில வகை ஆமைகள் 52 அங்குல நீளமும், சுமார் 300 கிலோ எடையும் இருக்கும். சிறிய செர்சோபியாசு ஆமை வகை 3.1 அங்குலம் நீளம் இருக்கும்.
நில ஆமைகள் 1 முதல் 2 முட்டைகள் வரை இடும். சில நேரங்களில் அதிக முட்டைகள் இட்ட சம்பவங்களும் நடை பெரும். சராசரி 100 லிருந்து 160 நாட்கள் அடை காக்கல் நடைபெறும்.
இரவில் முட்டை இட்டதும் பெண் ஆமைகள் மணலால் மூடி விடும். ஆண்டு தோறும் முட்டை இடாது. சில ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் முட்டை இடும்.
அடை காலம் முடிந்ததும் குஞ்சுகள் முட்டைகளை உடைத்துக் கொண்டு வெளிவந்து தனியாக வாழ பழகிக்கொள்ளும். 300 வருடங்கள் வரையயில் வாழும் ஆமைகளும் உண்டு.
பொதுவாக தாவரத்தின் தண்டுகள், கிழங்கு இலை, புழு, பூச்சிகள், சிறிய வகை மீன்கள் இவற்றை உண்ணும்.
நில ஆமைகள் கண்களுக்கு கீழே எதிரில் இருப்பவற்றை காணும் வகையில் படைக்கப் பட்டுள்ளன.
ஆமைகளுக்கு பற்கள் கிடையாது. ஆனால் வலுவான அலகும் தாடைகளுகும் உள்ளன. அண்டார்டிகா கண்டத்தில் ஆமைகள் உயிர் வாழ்வது இல்லை.
இவை தனிமை விரும்பிகள். ஐரோப்பிய நாடுகளில் ஆமைகளை செல்லப்பிரானியாக வளர்த்து வருகின்றனர்.
ஆமைகளை அதன் ரத்தத்திற்காக வேட்டையாடுவதால் அவை சில இடங்களில் அழிந்து வருகின்றன. நட்சத்திர வகை ஆமைகளின் மதிப்பு அதிகம் என்பதால் அவைகளை கடத்துவதும் அதிகரித்து வருகின்றது.