வாசுதேவன்
தென்னை மரங்களில் தொங்கும் இளநீர்களை தாவி பிடித்து கூரிய பல்லால் ஓட்டை போட்டு குடிக்கும் திறமை மிக்கது இந்த மரநாய்.
இவை ஒரு தென்னை மரத்தில் இருந்து அடுத்த தென்னை மரம் 8 - 10 அடி இடை வெளி இருந்தாலும் சுலபமாக தாவி செல்லும்.
கூச்ச சுபாவம் கொண்டவை. அதேபோல் மோப்பம் பிடிக்கும் திறமையும் அதிகம்.
இரவு நேரங்களில் வலம் வரும் இவை, ஊனுண்ணி விலங்கு வகையை சார்ந்தது.
இதன் கண்கள் அகலமாகவும், வட்ட வடிவிலும் பெரிதாக இருக்கும். பார்வை திறன் அதிகம் கொண்டது.
காதுக்கள் சற்று நீண்டும் பெரிதாகவும் தோற்றமளிக்கும்.
நீண்ட மெலிந்த உடல் அமைப்பு கொண்டதாகும்.
எடை சுமார் 5 கிலோ வரையில் இருக்கும். நீளம் சுமார் 54 செமீ.
அனைத்துண்ணி விலங்குகளான இவை சதைப்பற்றுள்ள சிறிய விதைகள் உள்ள பழங்களையும் உண்ணும்.
இவைகளில் மூன்று வகைகள் உள்ளன. அவை நிலா வால், குட்டை வால், மிக சிறிய வால் மர நாய்கள் என்று கூறப் படுகின்றன.
தெற்கு மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் அதிகம் வசிக்கின்றன. வட அமெரிக்கவிலும் மர நாய்கள் காணப் படுகின்றன.
4 முதல் 8 குட்டிக்கள் போடும். குட்டிகளை பத்திரமாக பாதுகாக்கும்.
2008 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி மர நாய்கள் அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.