வாசுதேவன்
குதிரைப் போன்று தோற்றம் உள்ள வரிக் குதிரைகள், குதிரை இனத்தை சார்ந்தவை அல்ல. இவை காட்டு விலங்குகள்; கூட்டமாக காணப்படும்.
வரிக்குதிரைகள் நின்று கொண்டே உறங்கும் தன்மை கொண்டவை. இரண்டு வரிக் குதிரைகள் ஒன்றன் மீது ஒன்று கழுத்தை சாய்துக் கொண்டு உறங்கும்.
மனிதர்களின் கை ரேகைகள் ஒத்துப் போகாதது போல், வரிக் குதிரைகளின் வரி கோடுகளும் ஒத்துப் போகாது. ஒவ்வொரு வரிக்குதிரையின் வரி கோடுகள் தனித்துவமாவை.
வரிக் குதிரைகள், குதிரைகள் போல் குட்டிப் போடும். தாய் குதிரை குட்டியை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
பிறந்த குட்டி சுமார் 6, 10, 20 நிமிடங்களில் முறையே நிற்கவும், நடக்கவும், ஓடவும் திறமை கொண்டவை.
காடுகளில் சராசரியாக 20 - 25 வருடங்கள் உயிர் வாழும்.
மிருககாட்சி சாலைகளில் இன்னும் அதிகமான வருடங்கள் வாழும். சுமார் 2 மீட்டர் உயரமும், 3 மீட்டர் நீளம் வரை வளரக் கூடியவை.
மணிக்கு 55 - 60 கிலோ மீட்டர் வேகம் ஓடும். நாள் ஒன்றிற்கு நெடும் தூரம் நடக்கும் சக்தி கொண்டவை.
இவை உயிர் வாழ்வதற்கு தாவரங்களை உணவாக உட்கொள்கின்றன. முக்கியமாக புற்கள், மற்றும் செடி, கொடிகள், மரங்களின் தண்டுகள், பழங்கள் ஆகியவற்றையும் உண்ணும்.
சில விஷயங்களில், இவை குதிரைகள், கழுதைகள் குடும்பங்களை சேர்த்தாக கருதப்படுகின்றன. ஆனால் இவை தனித்துவம் கொண்டவை.
மூன்று வகைகள் உள்ளன. சமவெளி வரிக்குதிரைகள் (Plain Zebras) கிழக்கு, தெற்கு ஆப்பிரிக்காவில் வசிப்பவை. கிரேவிய்ஸ் வகை (Grevy's Zebras) கென்யா, எதியோபியா பாலைவனம் ஒத்த பகுதிகளில் காணப்படுபவை. நம்பியா, அங்கோலா, தென் ஆப்பிரிக்க மலைப் பகுதிகளில் இருப்பவை, மூன்றாவது வகை (Mountain Zebras)
கிரேவிய்ஸ் வகை (Grevy's Zebras) அழியும் தருவாயில் உள்ளதாக கருதப் படுகின்றது.
வரிக்குதிரைகள் ஆக்ரோஷமானவை. பின்னங் கால்களை தூக்கி உதைக்கும் குணம் கொண்டவை. சிங்கங்கள், சிறுத்தைகள், வேங்கை புலிகள், கழுதைப் புலிகள் ஆகியவற்றை எதிர்த்து போராடி வெற்றி கொள்ளும் குணம் படைத்தவை.
பசுமையை தேடி இடம் விட்டு இடம் செல்வதால், இவை கூட்டமாக செல்பவை. எதிரிகள் தாக்குதலில் இருந்து தப்பிக்க வெகு வேகமாக ஓடும் திறனும், கூரிய பார்வை திறனும் உடையவை.
இவற்றை குதிரைகள் போல் பழக்கப் படுத்தி அவற்றின் மீது அமர்ந்தோ அல்லது வண்டிக்களை இழுத்து செல்லவோ உபயோக்கிக்க முடியாது.
இருந்தும், கல்கத்தாவில் தனவந்தர் மன்மதநாத் முல்லிக் என்பவர் அலிப்பூர் மிருகக்காட்சி சாலையில் இருந்து ரூ6000/- செலுத்தி இரண்டு வரிக் குதிரைகள் வாங்கி, பழக்கப் படுத்தி கோச் வண்டியில் பூட்டி கல்கத்தாவின் வீதியில் 1930 களில் செலுத்தி மகிழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.