விசித்திரமான கடல் வாழ் உயிரினங்கள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

எட்டி நண்டு: தென் பசுபிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒட்டுமீன் இது. 15 செ.மீ. நீளமுள்ள பட்டு போன்ற உரோமத்தை கொண்டுள்ளது. இவை கடலுக்குள் ஆழமான நீர் வெப்ப துவாரங்களில் வாழ்கின்றன. இவற்றிற்கு கண்கள் இல்லாததால் அதன் சுற்றுப்புறத்தை உரோமங்கள் கொண்டு உணரும்.

எட்டி நண்டு

பைக் பிளென்னி: அமெரிக்காவின் மேற்கு கரையோர பகுதிகளில் காணப்படும் இவை 30 சென்டிமீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை. பாறைகள் நிறைந்த ஆழமற்ற கரையோரங்களில் விரிசல் மற்றும் பிளவுகளில் மறைந்து காணப்படும். இவை அச்சுறுத்தும் வகையில் பெரிய வாய்களை கொண்டிருக்கின்றன.

பைக் பிளென்னி

பிரானா மீன்கள்: அமேசான் நதியில் வாழ்கின்ற 12 அங்குலம் வரை வளரக்கூடிய மீன் இது. இதன் பற்கள் கூரான கத்தியைப் போன்று இருக்கும். இவற்றின் வாயில் கிட்டும் சதையை ஒரு நொடியில் பிய்த்து எடுத்து விடும்.

பிரானா மீன்கள்

சொறி மீன்கள் (ஜெல்லி பிஷ்): இவை மீன் என்று பரவலாக அழைக்கப்பட்டாலும் மீன் அல்ல. இவை கடல் மற்றும் பெருங்கடல் பகுதிகளில் மிகுதியாக காணப்படுகின்றன. இதன் நச்சுக்கள் மனித உடலில் சிரங்கு சொறி அழற்சியை உண்டாக்குவதால் சொறிமீன் என பெயர் பெற்றது.

சொறி மீன்கள்

மீன் துளி: ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியா கடற்கரையில் காணப்படும் இவற்றின் இருப்பு சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மீன்கள் எலும்பு மற்றும் தசைகள் இல்லாத ஜெல்லி போன்ற அமைப்புடன் உள்ளது. இவை தன்னிச்சையாக நகர முடியாது. இதன் வாய்க்கு நேராக நீந்துவதை மட்டுமே உண்ணும்.

மீன் துளி

சால்ப்: நியூசிலாந்தின் கடற்கரையில் காணப்படும் மீன். கண்ணாடி போன்று வெளிப்படையானது. ஆனால் இவை செதில்கள் மற்றும் தொடுவதற்கு கடினமான உடலுடன் காணப்படுகின்றன.

சால்ப்

மாங்க் ஃபிஷ்: இவை கடலில் ஒரு மீட்டர் ஆழத்தில் சூரிய ஒளி எட்டாத இருளில் வாழ்கின்றது. இவை மிகவும் ஆக்ரோஷமானவை. இதன் நெற்றியில் ஒரு சிறப்பு ஒளிரும் செயல்முறையுடன் ஈர்க்கிறது.

மாங்க்ஃபிஷ்

ஸ்மால்மவுத் மேக்ரோபின்னா: வினோதமான ஆழ்கடல் மீன் இது. இதன் கண்கள் அதன் தலைக்குள் அமைந்துள்ளது.

ஸ்மால்மவுத் மேக்ரோபின்னா

கடல் வெள்ளரி: கடல் வெள்ளரிகள் முதுகெலும்பில்லாத விலங்குகளின் ஒரு வகையாகும். உணவாக உண்ணப்படும் இனங்கள் பொதுவாக கடல் வெள்ளரிகள் என்று அழைக்கப்படுகின்ற

கடல் வெள்ளரி

அமேசானிய டால்ஃபின்: இது மிகப்பெரிய நதி டால்பின் ஆகும். 2.5 மீட்டர் நீளம் மற்றும் 2 குவிண்டால் எடையை கொண்டது. வெளிர் சாம்பல் இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் இவை மெல்லிய வால் மற்றும் குறுகிய முகவாய்க் கொண்டது.

அமேசானிய டால்ஃபின்

மூன் ஃபிஷ் அல்லது மோலா மோலா: இந்த மீன்கள் மூன்று மீட்டருக்கும் அதிகமான நீளமும் ஒன்றரை டன் எடையும் கொண்டவை. இந்த சந்திரன் மீன் அடர்த்தியான தோல் கொண்டது. அதன் மேற்பரப்பு சிறிய எலும்புகளால் மூடப்பட்டிருக்கும்.

மூன் ஃபிஷ்

வாழும் கல் : சிலி கடற்கரைகளில் வாழும் உயிரினங்கள். அவற்றின் தோற்றம் கல் போன்று காணப்படுகிறது. இந்த உயிரினங்கள் ஆண் மற்றும் பெண் உறுப்புகளை கொண்டுள்ளன. துணையின் உதவி இன்றி இனப்பெருக்கம் செய்ய முடியும்.

வாழும் கல்
Zen Philosophy
வாழ்க்கையை மேம்படுத்தும் ஜென் தத்துவங்கள்!