Tasmanian devil: பேய் போல் பயங்கரமாக அலறும் டாஸ்மேனியன் டெவில்கள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

வயிற்றில் பை உள்ள மாமிச உண்ணி. மார்சுபியல் இனத்தைச் சேர்ந்த பாலூட்டி.

Tasmanian devil | Imge Credit: Pinterest

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா பகுதியில் மட்டும் காணப்பட்டதால், இதற்கு டாஸ்மேனியன் டெவில் என்று பெயர் வந்தது. 

Tasmanian devil | Imge Credit: Pinterest

இது 20 முதல் 30 அங்குல அளவு வரை வளரும். இதன் எடை 6-10 கிலோ வரை இருக்கும். உலகின் மிகப்பெரிய மாமிச உண்ணி (சதை உண்ணும்) மார்சுபியலாகும்.

Tasmanian devil | Imge Credit: Pinterest

இந்த அணில் அளவுள்ள பாலூட்டியின் பூர்வீகம் ஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மேனியா என்னும் ஒரு சிறிய தீவாகும். 

Tasmanian devil | Imge Credit: Pinterest

இவை கனமான முன் பகுதிகள், பலவீனமான பின்பகுதிகள் மற்றும் பெரிய சதுர தலையுடன் கரடி போன்ற தோற்றம், அடர்த்தியான கருப்பு ஃபர் கோட், வலுவான மற்றும் கூர்மையான பற்கள் கொண்டவை. 

Tasmanian devil | Imge Credit: Pinterest

இறந்த செம்மறி ஆடு போன்ற விலங்குகளின் மாமிசத்தை உண்பதுடன் சில வண்டுகளின் லார்வாக்களையும் உட்கொள்கின்றன. இப்படி இறந்த உடல்களை உண்ணும் பழக்கம்கொண்ட இந்த டெவில்கள், பயம் ஏற்படுத்தும் அளவுக்குப் பயங்கரமாக அலறுவதால் இப்பெயர் உண்டானது. 

Tasmanian devil | Imge Credit: Pinterest

இதன் கர்ப்பக் காலம் மூன்று வாரங்களாகும். இந்த வகை உயிரினங்கள் பை போன்ற அமைப்பில் இளம் உயிர்களைப் பாதுகாக்கின்றன. இவை சுமார் ஐந்து மாதங்கள் பையில் இருக்கும்.

Tasmanian devil | Imge Credit: Pinterest

கங்காரு, வாலபி, கோவாலா போன்றவை இவ்வகை உயிரினங்களில் நன்கு அறியப்பட்ட விலங்குகளாகும்.

Tasmanian devil | Imge Credit: Pinterest

புதிதாகப் பிறந்த குட்டிகள் இளஞ்சிவப்பு நிறத்தில் ரோமங்கள் இல்லாமல் தெளிவற்ற முக அம்சங்கள்கொண்டு பிறக்கும்.

Tasmanian devil | Imge Credit: Pinterest

டாஸ்மேனியன் டெவில்களின் பற்கள் மற்றும் தாடைகள் பல அம்சங்களில் ஹைனாவைப் போலவே உள்ளன.

Tasmanian devil | Imge Credit: Pinterest

இந்த விலங்கு ஆஸ்திரேலியாவில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு அதிக எண்ணிக்கையில் இருந்ததாகவும் பின் படிப்படியாகக் குறைந்து அழிவின் விளிம்புக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. 

Tasmanian devil | Imge Credit: Pinterest

இந்நிலையில் இந்த விலங்கைப் பாதுகாக்கவும், அதிகரிக்கவும் ‘ஆஸி ஆர்க்’ என்ற அமைப்பு டாஸ்மேனியன் டெவில் விலங்குகளை இனப்பெருக்கம் செய்தது.

Tasmanian devil | Imge Credit: Pinterest

அதன்பயனாக தற்பொழுது 25 ஆயிரம் டாஸ்மேனியன் டெவில் விலங்குகள் இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tasmanian devil | Imge Credit: Pinterest
Sea animone | Imge Credit: Pinterest
கடல்தாமரை: இது மலரல்ல, மீன்!