கே.எஸ்.கிருஷ்ணவேனி
அழகான வண்ண வண்ண பூக்கள் நிறைந்த Creeper செடிகளை, நம் பால்கனி அல்லது காம்பவுண்ட் சுவருக்கு அருகில் வளர விட்டால், அது நம் வீட்டிற்கே ஒரு அழகான தோற்றத்தை அளிக்கும். நம் வீட்டுத் தோட்டத்திற்கான சிறந்த சில க்ரீப்பர் தாவரங்களைப் பார்க்கலாம்.
மது மால்டி (Madhu Malti): இதன் அழகான சிவப்பு மற்றும் இளஞ் சிவப்பு மலர்கள் நம் தோட்டத்திற்கு சிறந்ததொரு அழகை கொடுக்கும். இதற்கு குறைந்த பராமரிப்பே போதுமானது.
அலமண்டா ஆலை (Allamanda cathartica): மஞ்சள் நிறத்தில் பிரகாசமாக பூக்கும் பூக்களுக்கும், பச்சை இலைகளுக்கும் பெயர் பெற்ற அலமண்டா செடி, கோல்டன் ட்ரம் செட் கொடி என்றும் அழைக்கப்படும். இது புதர் செடியாகவும் க்ரீப்பர் செடியாகவும் உள்ளது.
திரை க்ரீப்பர் (Curtain Creeper): இந்த திரைச்சீலை போல் காணப்படும் கொடிகள், பால்கனிகள் மற்றும் தோட்டங்களில் வளர்க்க எளிதாக இருக்கும்.
Bleeding Heart Wine (இதயக்கொடி): வெள்ளை மற்றும் பச்சை நிற மலர்களின் கலவையாக உள்ள இந்த பிளீடிங் ஹார்ட் வைன் ஒரு தனித்துவமான அடையாளத்தை நம் தோட்டத்திற்கு கொடுக்கக்கூடியது.
டெவில்ஸ் ஐவி (Devils Ivy /Money plant): இந்தக் கொடிகள் மிக விரைவாக வளரும் தன்மைக் கொண்டவை. குறைந்த பராமரிப்பே தேவைப்படும். இவற்றை பால்கனி மற்றும் மொட்டை மாடிகளில் கூட வளர்க்கலாம்.
ஆரஞ்சு ட்ரம்பெட் கொடி (Orange Trumpet Creeper): ஆரஞ்சு ட்ரம்பெட் வைன் அழகான ஆரஞ்சு வண்ண மலர்கள் கொண்ட ஒரு கொடி வகை. இது சிறந்த க்ரீப்பர் செடியாகும்.
ராக்கி பெல் (Rakhi bel): நீலம், ஆரஞ்சு, பச்சை மற்றும் வெள்ளை வண்ணங்களின் கலவையான ராக்கி பெல், நம் தோட்டத்திற்கு மிகுந்த அழகை கொடுப்பதுடன் எளிதாகவும் வளர்க்கக்கூடிய கொடியாகும்.
துன்பெர்கியா (Tunbergia): துன்பெர்கியா இது வங்காள எக்காளம் மற்றும் நீல எக்காளம் என்ற பெயர்களிலும் அறியப்படுகிறது.
போகன்வில்லா (Bougainvilla): இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் க்ரீப்பர் தாவரங்களில் இது முதன்மையானது. இவற்றின் வண்ண வண்ண பூக்கள் நம் தோட்டத்தை அழகு செய்யும்.
ரங்கூன் கிரிப்பர் (Rangoon Creeper): ரங்கூன் கிரீப்பர் என்பது பர்மா க்ரீப்பர், சைனீஸ் ஹனிசக்கிள் என்றும் அழைக்கப்படும் மணம் மிக்க பூக்களைக் கொண்டது. கோடை காலத்தில் வேகமாக வளரும் இச்செடியின் பூக்கள் வெள்ளை நிறத்தில் பூத்து, பின்னர் இளம் சிவப்பாக மாறி, பின் சிறப்பு நிறமாக மாறும் அழகான தாவரமாகும்.