இயற்கையின் காவலர்கள்! இவங்க மட்டும் இவ்வளவு தூரம் பயணிக்கலைனா, இந்த பூமியே அழிஞ்சிரும்!

இந்திரா கோபாலன்

1. ஆர்க்டிக் டெர்ன்:  இந்த பறவை இனம் அதிக தூரம் பயணமாக ஆர்க்டிக் பகுதியிலிருந்து அண்டார்க்டிக் பகுதி வரை இடம்பெயர்வு செய்கிறது. வருடத்தில் 70000 கி.மீ காலை நேரத்திலையே பயணிக்கிறது.

Arctic Tern

2. பார் டெய்ல்ட்  காட்விட்: கடல் வாழ் உயிரினமாகிய இது 11000 கி.மீ. அலாஸ்காவில் இருந்து ந்யூசீலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு பயணிக்கிறது‌. இதன் நீண்ட தூர பயணம் இதன் பொறுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது‌. 

Bar-tailed Godwit

3. சூட்டி ஷியர் வாட்டர்: வருடத்தில்  இந்த இனம் 64000 கி.மீ பயணம் செய்கிறது‌. மேலும் இது குட்டிகளை ஈன்றெடுக்கும் நேரத்தில் பயணம் மாறுபடுகிறது.

Sooty Shearwater

4. லெதர்  பாக்  சீ டர்டில்: உணவிற்காக குளிர்ந்த பகுதிக்கும், கூடு கட்டுவதற்காக வெப்பமான இடங்கள் என்று கடலில் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணிக்கின்றன. 

Leatherback Sea Turtle

5. மோனார்க் பட்டாம் பூச்சி: இந்த வகை பட்டாம்பூச்சி  கானடாவிலிருந்து அமெரிக்கா மற்றும் மெக்சிகோ பகுதிகளுக்கு சுமார் 4800 கி.மீ பயணம் மேற்கொள்கிறது. இது பயணத்தின் போது இனச்சேர்க்கையில் ஈடுபடுகிறது‌.

Monarch butterfly

6. கரி பௌ: துருவ மான் அல்லது பனிமான் என அழைக்கப்படுறது வருடத்தில் ஒரு முறை 3000 கி.மீ தொலைவு இடம்பெயர்வு செய்கிறது. வடபகுதியில் குளிர் அதிகமாகும் போது தென்பகுதிக்கு திரும்புகிறது.

Caribou

7. க்ரே திமிங்கிலம்: இந்த வகை திமிங்கிலம் அதிக தூரம் பயணம் செய்வதாக கூறப்படுகிறது. வருடத்தில் 14,000 மைல்கள் பயணிக்கின்றன. இது குளிர் பகுதிகளுக்குச் சென்று இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது‌. கோடைகாலத்தில் அண்டார்டிகா பகுதியில் அதிக உணவிற்காக இடம்பெயர்வு செய்கிறது‌.

Gray whale

8. வில்டிபீஸ்ட்: இவற்றை ஆப்ரிக்கா, டான்சேனியா, கென்யா பகுதிகளில் காணலாம். இது வருடத்தில் 1800 மைல்கள் பயணிக்கின்றன. மனிதர்க ளின் வேட்டை, விவசாயம் போன்றவற்றால் இந்த இனம் அழிந்து வருகிறது.

Wildebeest

9. ஹ்ம்ம் பாக் திமிங்கிலம்(Humpback whale):

உலக அளவில் காணப்படும் இது உணவிற்காக போலார் பகுதியிலும் இனப்பெருக்கத்திற்காக டிராபிகல் பகுதிகளிலும் பயணிக்கிறது. இவை வருடத்தில்  3000கி.மீ. பயணம் செய்கின்றன. 

Humpback whale

தங்கள் உயிரைக்காத்துக்கொள்ளவும், இனப் பெருக்கத்திற்காகவும், உணவிற்காகவும் மற்றும் சீதோஷ்ண நிலைமைக்குத் தகுந்தாற்போல் சில உயிரினங்கள் தங்கள் வாழ்நாளில் பலமைல் தூரம் பயணிக்கின்றன‌. 

traveling
International Yoga Day | AI image
International Yoga Day: ஜூன் 21-க்கு பிறகு இதைப் பண்ணலனா வருத்தப்படுவீங்க!