எஸ்.மாரிமுத்து
1/14. சர்வதேச யோகா தினம் 2026 ஜூன் 21-ல், 11 ஆண்டுகளை நிறைவு செய்து 12வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
2/14. யோகா இந்தியாவில் தோன்றியது. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய இந்தியாவில் உருவான மனம் மற்றும் உடல் சேர்ந்த பயிற்சியாகும்.
3. புராணங்களின்படி சிவபெருமானே யோகாவை உலகுக்கு அளித்த 'ஆதியோகி' என்று கருதப்படுகிறார்.
4/14. யோகக் கலையை முறையாக வடிவமைத்து அதை எட்டு நிலைகளாக தொகுத்தவர் பதஞ்சலி முனிவர் ஆவார்.
5/14. யோகக்கலை 5,000 முதல் 8,000 ஆண்டுகளுக்கு முன் பண்டைய இந்தியாவில் உருவானது. 'யுஜ்' (Yuj) என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்து உருவானது.
6/14. யோகாவுக்கு இணைத்தல் அல்லது ஒன்றுபடுத்துதல் என்று பொருள். இது உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒருங்கிணைக்கும் ஒரு தத்துவ மற்றும் ஆன்மீக கலையாகும்.
7/14. தினமும் யோகா பயிற்சி செய்வதால் உடற்பயிற்சி முதல் மன அமைதி வரை எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. உடலை வளைத்து செய்யும் ஆசனங்கள் தசைகளை நீட்டி உடலை நெகிழ்வுத் தன்மையையும் சமநிலைப்படுத்துகிறது.
8/14. பிரணாயாமம் மனதை ஒருமுகப்படுத்தி கார்டிசோல் அளவைக் குறைத்து மன அழுத்தத்தை போக்குகிறது.
9/14. அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும், கொழுப்பை குறைக்கவும் ஒட்டுமொத்த இதய செயல்பாட்டை மேம்படுத்தவும், யோகா உதவுகிறது.
10/14. ஆசனங்கள் மற்றும் ஆழ்ந்த சுவாசம் ஆகியவை வயிற்று உறுப்புகளை தூண்டி செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.
11/14. மூச்சுப் பயிற்சிகள் பிராணயாமம் நுரையீரலின் கொள்ளளவை அதிகரித்து உடலுக்கு தேவையான பிராணவாயுவைச் சரியாக வழங்குகிறது.
12/14. உடலின் சோர்வை போக்கி நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க உதவுகிறது.
13/14. யோகா செய்ய அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னும், மற்றும் மாலை சூரிய மறைவிற்கு முன்னும் மிகச்சிறந்த நேரங்கள் ஆகும்.
14/14. யோகாசனங்கள் மற்றும் பிரணாயாமம் செய்யும்போது வயிறு காலியாக இருக்க வேண்டும். சாப்பிட்டபின் குறைந்தது மூன்று முதல் நான்கு மணி நேரம் இடைவெளி அவசியம்.