வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் - வாங்க போகலாம்...!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தை பார்வையிட சிறந்த நேரம் நவம்பர் முதல் மார்ச் வரை ஆகும்.

Vedanthangal Bird Sanctuary

சிறந்த சுற்றுலா தலமான இந்த சரணாலயத்தில் தற்போது 22,000க்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன. ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் குடும்பத்துடன் சரணாலயத்திற்கு வந்த வண்ணம் உள்ளார்கள்.

Vedanthangal Bird Sanctuary | Image Credit: tnwildsanctuaries

ஆஸ்திரேலியா, சைபீரியாா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா உள்ளிட்ட 16 நாடுகளிலிருந்து ஏகப்பட்ட பறவைகள் வந்துள்ளன. பறவைகளை ஆற்றங்கரை அல்லது கண்காணிப்பு கோபுரத்திலிருந்து பார்க்க மிகவும் அற்புதமாக இருக்கிறது.

Vedanthangal Bird Sanctuary | Image Credit: tamilnadutourism

74 ஏக்கர் பரப்பில் பறந்து விரிந்து கிடக்கும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் 40,000க்கும் மேற்பட்ட பறவைகள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த சரணாலயத்துக்கு வருகை தருகின்றன.

Vedanthangal Bird Sanctuary

இந்த சரணாலயம் 1798 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது. சரணாலயத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான பறவைகள் பறக்கும் காட்சி பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும். இங்கு ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பறவைகள் வருகின்றன.

Vedanthangal Bird Sanctuary | Image Credit: johnson

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு வந்து தங்கி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். இங்கு வரும் பறவைகளில் நீர்காகங்கள், பலவித கொக்குகள், நாரைகள், கூழைக்கடா, நீர்க்கோழி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

Vedanthangal Bird Sanctuary | Image credit: holidify

இங்கு 400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வந்து சென்றுள்ளன. உள்ளூர் பண்ணையார்கள் பறவைகளை வேட்டையாடும் இடமாக முதலில் இது இருந்துள்ளது. அவர்களை தொடர்ந்து ஆங்கிலேயர்கள் வேட்டையாடி பொழுதை கழிக்க வேடந்தாங்கலை பயன்படுத்தினார்கள். வேடந்தாங்கல் என்றால் வேடர்களின் கிராமம் என்று அர்த்தம்.

Vedanthangal Bird Sanctuary | Image credit: Piqsels

வேடந்தாங்கலுக்கு வரும் வலசைப் பறவைகள் சில: கிளுவை, ஊசிவால் வாத்து, நீலச்சிறகி, தட்டைவாயன், பச்சைக்காலி, பவளக்காலி ஆகியவை.

Vedanthangal Bird Sanctuary

வேடந்தாங்கலில் காணப்படும் உள்நாட்டு பறவைகள் சில: சிறிய நீர்காகம், கூழைக்கடா, பாம்புத்தாரா, மஞ்சள் மூக்கு நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், முக்குளிப்பான், நத்தை குத்தி நாரை ஆகியவை.

Vedanthangal Bird Sanctuary | Image Credit: Wikipedia

சிறந்த சுற்றுலாத் தலமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை குடும்பத்துடன் குறிப்பாக குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்களுக்கு விதவிதமான பறவைகளை காட்டி மகிழ்விக்க சிறந்த நேரம் இது.செல்வோமா?

Vedanthangal Bird Sanctuary | Image Credit: tripsavvy
Buttermilk | Img Credit: Kuali
Summer Special 'நீர் மோர்' வகைகள்!