நடேஷ் கன்னா
சிபில் நாரை
பெரிய கொக்கு போன்ற பறவை இனமாகும். இந்தப் பறவை இனம் ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது. பெரிய ஷூ போன்ற அலகு உடையது. சதுப்பு நிலங்களில் உள்ள தவளைகள் மீன்களை உணவாக உட்கொள்கிறது.
விக்டோரியா கிரவுண்ட் புறா
இது உலகின் மிகப்பெரிய புறா இனத்தைச் சார்ந்தது. நியூ கினியாவில் காணப்படுகிறது. நீல நிறமும் சாம்பல் நிறமும் கலந்த பறவை இனம். மகுடம் போன்ற இறகுகள் கொண்டது. மிகவும் அழகான தோற்றம் உடையது.
குவாட்ரல் பறவை
இந்த வகை இனம் மத்திய அமெரிக்காவில் காணப்படும் அழகிய பறவை பச்சை மற்றும் சிவப்பு நிற இறகுகள் கொண்டது. இதனுடைய நீண்ட வால் அழகின் சின்னமாக கருதப்படுகிறது.
காகாபோ பறவையினம்
நியூசிலாந்தில் காணப்படும் ஒருவகையான கிளி. இதனால் பறக்க இயலாது . இரவு நேரத்தில் மட்டுமே காணப்படும் அரிதான பறவை. மிகவும் விசேஷமாக இது கருதப்படுகிறது.
செகரட்டரி பறவை
ஆப்பிரிக்காவில் காணப்படும் நீல நிற பறவை இனம். நீண்ட கால்கள் கொண்டது. பாம்புகளை வேட்டையாடுவதில் கில்லாடி.
டப் டப் பபுல்
அலாஸ்கா கலிபோர்னியாவில் காணப்படும் பறவை இனம். இது ஒரு கடல் பறவை. தங்க நிற இறகுகள் கொண்டது. இனச்சேர்க்கை காலத்தில் மட்டுமே காணப்படும் ஒரே நேரத்தில் 20 மீன்களை பிடிக்கும் திறமை உடையது.
டோ டோ பறவை
இது புறா குடும்பத்தைச் சார்ந்தது. ஆனால் இதால் பறக்க இயலாது. மொரிஷியஸ் தீவில் காணப்படும். 50 பவுண்டு வரை எடை கொண்டது. இது புறா குடும்பத்தைச் சார்ந்தது. ஆனால் இதால் பறக்க இயலாது. மொரிஷியஸ் தீவில் காணப்படும். 50 பவுண்டு வரை எடை கொண்டது.
ஷோ வெளர் பறவை
இது ஒரு வகை வாத்து இனத்தைச் சார்ந்தது. மண்வெட்டி போன்ற தாடைகள் கொண்டது. சதுப்பு நிலங்களில் உள்ள தவளைகள் மீன்களை உணவாக உட்கொள்கிறது. அலாஸ்கா தீவில் காணப்படும்.
ஸ்கார்லெட் ஐவி பறவை
ஹவாய் தீவில் காணப்படும் கருஞ்சிவப்பு நிற பறவை. பூக்களில் உள்ள தேனை மட்டும் அருந்தும். ஹவாய் தீவில் உள்ள பூர்வீக காடுகளில் மட்டுமே காணப்படும்.
இன்கா பறவை
தென் அமெரிக்கா பெருங்கடல் பகுதியில் காணப்படும் பறவை இனம் இதற்கு அழகிய மீசை உண்டு. விக்டோரியா என்ற புறாவுக்கு தலையில் கிரீடம் உண்டு .
இமாலயன் கிர்பான் பறவை
இந்தப் பறவை இனம் இமயமலை பகுதிகளில் மட்டுமே காணப்படும். மிக உயரமாக பறக்கும் திறமை கொண்டது. இது பருந்து இனத்தை சார்ந்தது.