நான்சி மலர்
குவாக்கா, அதன் புன்னகைக்கும் முகபாவனை காரணமாக "உலகத்தின் மகிழ்ச்சியான விலங்கு" என்று அழைக்கப்படுகிறது. இது கங்காரு இனத்தை சார்ந்த சிறிய உயிரினமாகும்.
சிவப்பு பாண்டா, பஞ்சுபோன்ற வால் மற்றும் பெரிய தலையுடன் இருக்கும் ஒரு பாலூட்டி. சிவப்பு பாண்டா மூங்கில், பழங்கள் மற்றும் பூச்சிகளை உண்கின்றன.
ஆப்பிரிக்க முள்ளெலி, சிறிய வீட்டு விலங்காக செல்லமாக வளர்க்கப்படுகிறது. இவை 6 முதல் 10 அங்குல நீளம் மற்றும் 8 முதல் 21 அவுன்ஸ் எடை கொண்டவை.
சைபீரியன் பறக்கும் அணில், பாலூட்டி விலங்குகளில் ஒன்றாகும். இந்த அணில்கள் மரம் விட்டு மரம் தாவிச் செல்ல, உடலின் பக்கவாட்டில் உள்ள தோல் போன்ற அமைப்பைப் பயன்படுத்துகின்றன.
இதன் பஞ்சுபோன்ற முடிகள் மற்றும் குழந்தைப் போன்ற நடை மிகவும் ரசிக்கத்தக்கவை. இவற்றின் இறகுகள் சாம்பல் நிறம் அல்லது நீல நிறத்தில் இருக்கும்.
இது மரத்தில் வாழும், மிகவும் மெதுவாக அசையக்கூடிய ஒரு பாலூட்டி விலங்கு ஆகும். 'Sloth' என்ற ஆங்கில வார்த்தைக்கு 'சோம்பல்' என்ற பொருள் உண்டு.
சீனாவை பூர்வீகமாகக் கொண்ட மிகவும் க்யூட்டான விலங்கு தான் பாண்டா கரடி. இவற்றின் உடலில் அடர்த்தியான வெள்ளை நிற மற்றும் கருப்பு நிற ரோமம் இருக்கும். இந்த நிறம் இதன் தனித்துவமான அடையாளம்.
கடல் கீரிகள்(Sea otter) பூமியிலேயே அதிக அடர்த்தியான ரோமங்களைக் கொண்ட விலங்கு ஆகும். இந்த அடர்த்தியான ரோமம் தான், கடலின் குளிர்ந்த நீரில் கூட அதன் உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவுகிறது.
உலகில் உள்ள குரங்கு இனங்களிலேயே மிகச் சிறியது. இவை ஒரு மனிதனின் உள்ளங்கையில் எளிதில் அடங்கிவிடும் அளவுக்குச் சிறியவையாகும்.
நரி இனங்களிலேயே மிகச் சிறியது ஆகும். இதன் உடலை விட காதுகள் மிகப் பெரியவை. இந்த நரியின் ரோமம் அடர்த்தியான மணல் அல்லது கிரீம் நிறத்தில் இருக்கும்.