தவளைகள்: நீங்கள் அறியாத 10 ஆச்சரியமூட்டும் உண்மைகள்!

கிரி கணபதி

மழைக்காலம் வந்தாலே "குவாக் குவாக்" சத்தத்தோட நமக்கு ஞாபகம் வர்றது தவளைகள் தான். பார்க்கிறதுக்கு சாதாரணமா இருந்தாலும், தவளைகளுக்குள்ள பல ஆச்சரியமான ரகசியங்கள் ஒளிஞ்சிருக்கு.

Frog

தண்ணியைக் குடிக்காது, உறிஞ்சும்! நம்மள மாதிரி தவளைங்க வாயால தண்ணி குடிக்காது. அதுக்கு பதிலா, தன்னோட தோல்கள் வழியா உடம்புக்குத் தேவையான தண்ணியை உறிஞ்சி எடுத்துக்கும். அதனாலதான் அதோட தோல் எப்போதுமே ஈரப்பதமா இருக்கு.

Frog

கண்களால் உணவை விழுங்கும்! தவளைங்க தன்னோட இரையைப் பிடிச்சதும், அதை முழுங்குறதுக்கு தன்னோட கண்களைப் பயன்படுத்தும். இரையை வாய்க்குள் தள்ளுறதுக்கு, கண்களை தலையோட உள்பக்கமா இழுக்கும். அப்போ கண்கள் உணவை தொண்டைக்குள் தள்ள உதவி செய்யும். என்ன ஒரு விசித்திரமான டெக்னிக் பாருங்க!

Frog

சில தவளைகள் குளிரில் உறைந்து உயிர்பிழைக்கும்! மரத் தவளை (Wood Frog) மாதிரி சில தவளை இனங்கள், குளிர்காலத்துல தன்னோட உடம்பை கிட்டத்தட்ட முழுசா ஐஸ் கட்டியா உறைய வச்சிக்கும். இதயம், மூச்சு எல்லாம் நின்னுடும். ஆனா, வெயில் காலம் வந்ததும் மறுபடியும் உயிர் பெற்று, துள்ளி குதிச்சு ஓடிடும்.

Frog

ஆண் தவளைகள் பிரசவம் பார்க்கும்! டார்வின் தவளை (Darwin's Frog) இனத்துல, பெண் தவளை முட்டையிட்டதும், ஆண் தவளை அந்த முட்டைகளை தன்னோட வாய்க்குள் எடுத்து வச்சு பாதுகாக்கும். முட்டைகள் பொரிஞ்சு, குட்டித் தவளைகள் முழு வளர்ச்சி அடைஞ்சதும், அப்பா தவளை வாய் வழியா "பிரசவிக்கும்".

Frog

நுரையீரலால் கேட்கும் திறன்! சில தவளை இனங்களுக்கு காதுகள் சரியா கேட்காது. அதுக்கு பதிலா, காற்றில் வர்ற அதிர்வுகளை தன்னோட நுரையீரல் மூலமா உணர்ந்து, ஒலிகளைக் கேட்கும் திறன் அதுகிட்ட இருக்கு.

Frog

தோலை உரித்து சாப்பிடும் பழக்கம்! தவளைகள் வாரத்துக்கு ஒருமுறை தன்னோட பழைய தோலை உரிச்சிடும். ஆனா அந்த தோலை வீணாக்காம, அப்படியே சாப்பிட்டுடும். இதுல அதுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்குதாம்.

Frog

உலகிலேயே மிகப்பெரிய தவளை! கோலியாத் தவளை (Goliath Frog) தான் உலகத்திலேயே மிகப்பெரிய தவளை இனம். இது மேற்கு ஆப்பிரிக்காவுல காணப்படுது. ஒரு பிறந்த குழந்தையோட எடைக்கு சமமா, சுமார் 3 கிலோ வரைக்கும் வளருமாம்!

Frog

உள்ளுறுப்புகள் தெரியும் கண்ணாடித் தவளை! கண்ணாடித் தவளை (Glass Frog) அப்படின்னு ஒரு வகை இருக்கு. அதோட தோல் கண்ணாடி மாதிரி இருக்கும். இதனால, அதோட இதயம் துடிக்கிறது, உணவு செரிமானம் ஆகுறதுனு எல்லா உள்ளுறுப்புகளையும் நாம வெளியிலிருந்தே பார்க்க முடியும்.

Frog

டைனோசர்கள் காலத்து உயிரினம்! தவளைகள் டைனோசர்கள் காலத்திலிருந்தே, அதாவது சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக பூமியில வாழ்ந்துட்டு வருதுன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.

Frog

குட்டி தவளையை விட பெரிய தலைப்பிரட்டை! முரண்பாடான தவளை (Paradoxical Frog) அப்படின்னு ஒரு வகை இருக்கு. இதோட தலைப்பிரட்டை (Tadpole) சுமார் 25 சென்டிமீட்டர் வரைக்கும் வளரும். ஆனா, அது முழுசா வளர்ந்து தவளையா மாறும்போது, வெறும் 7 சென்டிமீட்டர் அளவுக்கு சுருங்கிடும். அதனாலதான் இதுக்கு இந்த பேர் வந்தது.

Frog

இப்போ சொல்லுங்க, தவளைகள் எவ்வளவு ஆச்சரியமான உயிரினம்னு! அதுங்க வெறும் சத்தம் போடுற ஜீவன்கள் மட்டும் இல்ல, இயற்கைல பல அதிசயங்களையும், விசித்திரங்களையும் தனக்குள்ள வச்சிருக்கு.

Frog