நான்சி மலர்
Murungai recipes
1. முருங்கைக்கீரை பொரியல்: நல்லெண்ணெயில் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் தாளித்து, கீரை சேர்த்து தண்ணீர் தெளித்து 5 நிமிடம் வேகவைத்து தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.
2. முருங்கைக்கீரை முட்டை பொரியல்: வெங்காயம், மிளகாய் தாளித்து கீரை வதங்கியதும், 2 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாகக் கிளறி, மிளகுத்தூள் தூவி இறக்கவும்.
3. முருங்கைக்கீரை கூட்டு: பாசிப்பருப்பு, தக்காளி வேகவைத்து கீரை சேர்க்கவும். தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் அரைத்து ஊற்றி ஒரு கொதி விட்டு கடுகு தாளிக்கவும்.
4. முருங்கைக்கீரை சூப்: தண்ணீரில் கீரை, சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, சீரகம், மிளகுத்தூள் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி, வெண்ணெய் சேர்த்து பருகவும்.
5. முருங்கைக்கீரை அடை: பருப்பு அடை மாவில் பொடியாக நறுக்கிய கீரை, வெங்காயம், பச்சை மிளகாய் கலந்து தோசைக் கல்லில் ஊற்றி நல்லெண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
6. முருங்கைக்கீரை துவையல்: உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, கீரையை எண்ணெயில் வதக்கி, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
7. முருங்கைக்கீரை வடை: ஊறவைத்த கடலைப்பருப்பு மசாலாவில் (சோம்பு, வெங்காயம், மிளகாய்) நறுக்கிய கீரையை பிசைந்து, வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
8. முருங்கைக்கீரை சாம்பார்: சாம்பார் கொதிக்கும் கடைசி 5 நிமிடத்தில் கீரையைச் சேர்த்து, கீரை வெந்ததும் நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.
9. முருங்கைக்கீரை பருப்பு உசிலி: ஊறவைத்து அரைத்த கடலைப்பருப்பை ஆவியில் வேகவைத்து உதிர்த்து, வதக்கிய கீரையோடு சேர்த்து பிரட்டி எடுக்கவும்.
10. முருங்கைக்கீரை சப்பாத்தி: கோதுமை மாவில் பொடியாக நறுக்கிய கீரை, சீரகம், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பிசைந்து சப்பாத்தியாக சுட்டு எடுக்கவும்.