பத்மினி பட்டாபிராமன்
நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், நலம் காக்கும், (Boosting Immunity and Well-being), இந்தியச் சூழலுக்கு ஏற்ற எளிய சூப்பர் உணவுகள் 10
ஆப்பிளைவிட 9 மடங்கு அதிகம் விட்டமின் சி கொண்ட நெல்லிக்காயில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடென்ட் உள்ளது. ஆப்பிளுக்குச் சொல்வதுபோல தினம் 1 நெல்லிக்காய் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டாம்.
நாம் வீட்டில் தயார் செய்யும் பானகத்தில் இரும்புச்சத்து, எலுமிச்சையின் விட்டமின் சி, ஏலக்காயில் உள்ள சத்துக்கள் எல்லாம் இணைந்து கிடைக்கிறது. பண்டைய நாட்களில் இருந்தே வயிறு, சிறுநீரகம், நுரையீரல் நோய்களுக்கான மருத்துவத்தில் ஏலக்காய் முக்கியமானதாக பயன்பட்டு வருகிறது.
முருங்கைக் கீரையில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, தவிர, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பீடாகரோடின்(beta-carotene), ஆன்டியாக்ஸிடென்ட் (anti oxidant) உட்பட ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
பப்பாளி, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் ஏற்ற பழம். மலச்சிக்கலைத் தடுக்கும். ஜீரணசக்திக்கு உதவும். பபாயின் என்ற என்சைம் இதில் உள்ளது. சருமப் பாதுகாப்புக்கு உகந்தது. புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆன்டிகேன்சர் சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பீடாகரோடின், கொண்டது பப்பாளி.
அன்றாடம் நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை எல்லாமே காணப்படுகிறது.
பருப்பு வகைகள் எல்லாமே புரோட்டீன் சத்து கொண்டவை என்றாலும், பயத்தம் பருப்பு எளிதில் ஜீரணமாகிவிடும். அதில் எலுமிச்சம் பழம், பச்சை மிளகாய் கலந்து கோசுமல்லிபோல் சாப்பிடும்போது விட்டமின் சி உடலில் சேரும்..
பால் ஒரு ஹை பையலாஜிகல் வேல்யூ (High Biological Value) கொண்ட முழு உணவு. இதில் இருக்கும் கால்சியம், பாஸ்ஃபரஸ் சத்துக்கள் நேரடியாக நம் எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. இதில் நிறைய விட்டமின் டி சத்தும், புரோட்டீனும் இருப்பதால் உடல் வலுப்பெறும். நம் நாட்டில் பொதுவாக புரதச் சத்துக் குறைபாடு காணப்படுகிறது, அதற்கு பால் உட்கொள்வது நல்ல தீர்வு.
தயிரில் காணப்படும் ப்ரோபயாடிக்ஸ் (Probiotics) மற்றும் 30,000 வகை நல்ல பேக்டீரியாக்களும் உடலுக்கு நன்மை தருபவையே.
புரதச் சத்து நிறைந்த சோயா உணவுகளில் உடலுக்குத் தேவையான ஒமேகா 3 அமிலச் சத்து, கார்போஹைடிரேட், நார்ச்சத்து போன்றவை உள்ளன.
நாம் வீடுகளில் ஊறுகாய் போடும் நார்த்தங்காய், கிடாரங்காய் இவற்றின் தோலில் அபரிமிதமான சத்துக்கள் உள்ளன. அவற்றை அப்படியே தோலோடு ஊறுகாய் போடுவதால் அந்த சத்துக்கள் உடலில் சேர்கின்றன.