சுருக்குப்பை செய்திகள் (23.03.2024)

கல்கி டெஸ்க்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இசை நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் ஏற்பட்ட துப்பாக்கி சுடு. 70 பேர் பலி. 100க்கும் மேற்பட்டோர் படுகாயம். இராணுவ சீருடையில் கும்பலாக வந்த தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூடு வெறியாட்டம்.

Moscow Attack

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற கொடூர தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ISIS . தங்கள் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தீவிர தாக்குதல் என விளக்கம்.

ISIS, Moscow Attack

ஐபிஎல் தொடரில் வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சேப்பாக்கத்தில் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்.

CSK

இரு நாட்டு நல்லுறவை மேம்படுத்த 2 நாள் அரசு பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி. பூடானின் உயரிய விருதினை பிரதமர் மோடிக்கு வழங்கினர் அந்நாட்டு மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக்.

PM Modi, Jigme Khesar Namgyel Wangchuck

நாளை திருச்சியில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் அதிமுக செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார்.

EPS

தமிழகத்தில் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக. விருதுநகரில் ராதிகா சரத்குமார் களமிறங்குகிறார்.

Radhika Sarathkumar | Image Credit: nowrunning

மக்களவை தேர்தலில் தேமுதிக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு. விருதுநகரில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரரை எதிர்த்து விஜயகாந்த் மகன் பிரபாகரன் போட்டி.

Vijaya Prabhakaran

பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ராஜகண்ணப்பர் கூடுதலாக கவனித்து வந்த உயர்கல்வித் துறை மீண்டும் பொன்முடியிடம் ஒப்படைப்பு.

Ponmudi,Stalin,R.N.Ravi

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி. வரும் 28ஆம் தேதி மீண்டும் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த டெல்லி நீதிமன்றம் உத்தரவு.

Arvind Kejriwal

ஈரோடு, கரூர், மதுரை, சேலம் மாவட்டங்களில் சதம் அடித்த வெயில். கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மக்கள் அவதி.

Summer Heat

கோடை வெப்பம் கொளுத்தி வரும் நிலையில் தென் மாவட்டங்களில் கோடை மழை. தூத்துக்குடி, திண்டுக்கலில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி.

Rain | Image Credit: elmundo

ஐபிஎல் தொடரில் இன்றிய போட்டியில் பஞ்சாப், டெல்லி அணி மோதல். மற்றொரு போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது Sun Risers Hyderabad

DC vs PK, SRH Vs KKR

கேரளாவில் தன்னை காண குவிந்த ரசிகர்களுடன் செல்ஃபீ எடுத்து மகிழ்ந்த நடிகர் விஜய். தமிழகமும் கேரளாவும் தனக்கு இரண்டு கண்கள் போன்றவை என பேச்சு.

Vijay

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு. வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி. இந்திய ரூபாய் மதிப்பு 35காசுகள் குறைந்து 83ரூபாய் 48 காசுகளாக உள்ளது.

Currency

இங்கிலாந்து இளவரசி கேத் மிட்டில்டனுக்கு புற்றுநோய் பாதிப்பு. புற்றுநோய்க்கு சிகிக்சை பெற்று வருவதாக கேத் மிட்டில்டன் உருக்கமாக வீடியோ வெளியீடு.

Kate Middleton

ஹோலி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே. சென்னையிலிருந்து நாகர்கோவில் உட்பட பல்வேறு தடங்களுகல் 28 ரயில்கள் இயக்கம்.

Holi Festival, Special Train

இந்தியாவின் முதல் மறுப்பயன்பாட்டு 'புஷ்பக்' விண்கலம் வெற்றிகரமாக சோதனை. விமான படை ஹெலிகாப்டரிலிருந்து தரை இறக்கப்பட்டது.

Puspak

நாடு முழுவதும் 20 CBSE பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து. தீடீர் ஆய்வின் போது மாணவர் சேர்க்கை உட்பட பல்வேறு விஷயங்களில் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கபட்டதால் நடவடிக்கை.

CBSE