நாக்கு செத்துப்போச்சா? சப்புக் கொட்டிச் சாப்பிட 10 ஊறுகாய் வகைகள்!

நான்சி மலர்

தமிழ்நாட்டின் பாரம்பரிய சுவையில், அதிக மெனக்கெடல் இல்லாமல் சட்டென்று செய்யக்கூடிய ஊறுகாய்கள் வகைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

Traditional pickles

கறிவேப்பிலை தொக்கு ஊறுகாய், கறிவேப்பிலையை வறுத்து அரைத்து செய்யப்படும் இந்த ஊறுகாய் முடி வளர்ச்சிக்கும், இரத்த சோகைக்கும் மிகவும் நல்லது.

Karuveppilai thokku | Credits: Mylapore Ganapathis

Mixed Veg Pickle என்பது காய்கறிகளை ஆவியில் லேசாக வேகவைத்து, கடுகு மற்றும் வினிகர் சேர்த்து செய்யப்படும் நார்த் இந்தியன் ஸ்டைல் ஊறுகாய்.

Mixed Veg Pickle | Credits: BetterButter

நார்த்தங்காய் ஊறுகாய் செய்ய நார்த்தங்காயை உப்பில் ஊறவைத்து ஊறுகாய் தயாரிக்க வேண்டும். காய்ச்சல் அல்லது உடல்நிலை சரியில்லாத நேரங்களில் நாவிற்கு சுவையைத் தரும்.

Citron pickle | Credits: NativeSpecial.com

தக்காளி ஊறுகாய்: தக்காளியை நன்கு வதக்கி தொக்கு பதத்திற்கு கொண்டு வருவது. இதை இட்லி, தோசை மற்றும் சாதம் என அனைத்திற்கும் தொட்டுக்கொள்ளலாம்.

Tomato pickle

காரத்தை விரும்புபவர்களுக்கு பச்சை மிளகாய் ஊறுகாய் பிடிக்கும். மிளகாயின் நடுவில் கீறி, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து ஊறவைக்க வேண்டும்.

Chillies pickle

இஞ்சியை பொடியாக நறுக்கி புளி மற்றும் வெல்லம் சேர்த்து செய்யப்படுவது தான் இஞ்சி ஊறுகாய். கேரளா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இது மிகவும் பிரபலம்.

Ginger pickle | Credits: Oorla

பூண்டு ஊறுகாய் செய்வதற்கு உரித்த பூண்டு இதழ்களை நல்லெண்ணெயில் வதக்கி, புளிக்கரைசல் மற்றும் பொடிகள் சேர்த்து செய்யப்படுவது. இது சுவை மட்டுமின்றி மருத்துவ குணம் கொண்டது.

Garlic pickle

பெரிய நெல்லிக்காய்களை வேகவைத்து, கொட்டைகளை நீக்கிவிட்டு மசாலா சேர்த்தால் ஆரோக்கியமான நெல்லிக்காய் ஊறுகாய் தயார். தயிர் சாதத்திற்கு இது மிகச்சிறந்த காம்பினேஷன்.

Amla pickles

எலுமிச்சையை ஆவியில் வேகவைத்தோ அல்லது உப்பில் ஊறவைத்தோ மிக எளிதாக எலுமிச்சை ஊறுகாய் செய்யலாம். இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது.

Lemon pickle | Credits BigOven

உடனடி மாங்காய் ஊறுகாய் செய்ய மாங்காயை சிறு துண்டுகளாக வெட்டி, மிளகாய் தூள், உப்பு மற்றும் கடுகு தாளித்து சேர்த்தால் 5 நிமிடத்தில் தயார்.

Mango pickle
Interview
வேலை நிச்சயம்! இன்டர்வியூவில் HR உங்களிடம் எதிர்பார்க்கும் அந்த 10 ரகசியங்கள்!