வேலை நிச்சயம்! இன்டர்வியூவில் HR உங்களிடம் எதிர்பார்க்கும் அந்த 10 ரகசியங்கள்!

கிரி கணபதி

ஒரு நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது பலருக்கும் பதற்றத்தை அளிக்கும் விஷயம். ஆனால், சரியான தயாரிப்பும், தன்னம்பிக்கையும் இருந்தால் வெற்றி நிச்சயம்.

Interview

1. நீங்கள் வேலைக்கு விண்ணப்பித்துள்ள நிறுவனத்தின் பின்னணி, அவர்களின் தயாரிப்புகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு செல்வது அவசியம்.

Interview

2. முதல் அபிப்ராயமே சிறந்தது. நேர்த்தியான, தொழில்முறைக்கு ஏற்ற ஆடைகளை அணிந்து செல்வது உங்கள் மீதான மதிப்பை அதிகரிக்கும்.

Interview

3. நேர்முகத் தேர்வு நடக்கும் இடத்திற்கு குறைந்தது 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே சென்று விடுங்கள். இது உங்கள் பதற்றத்தைக் குறைத்து, சூழலுக்குப் பழக உதவும்.

Interview

4. நிமிர்ந்து உட்காருதல், கண்ணைப் பார்த்துப் பேசுதல் மற்றும் முகத்தில் மெல்லிய புன்னகை வைத்திருத்தல் ஆகியவை உங்கள் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும்.

Interview

5. Tell me about yourself என்ற கேள்விக்கு, உங்கள் பெயர், படிப்பு மற்றும் திறமைகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்ல முன்கூட்டியே தயாராகுங்கள்.

Interview

6. கேள்வியை முழுமையாகக் கேட்ட பிறகு, நிதானமாகப் பதில் சொல்லுங்கள். அவசரப்பட்டுப் பேசுவதை விட, தெளிவாகவும் சுருக்கமாகவும் பேசுவதே புத்திசாலித்தனம்.

Interview

7. ஏதேனும் கேள்விக்குப் பதில் தெரியவில்லை என்றால், தயங்காமல் "தெரியாது" என்று உண்மையை ஒப்புக்கொள்வது நல்லது. பொய்யான பதில்கள் உங்கள் நன்மதிப்பைக் குறைக்கும்.

Interview

8. உங்கள் பலம், பலவீனம் என்ன என்பதை முன்னரே யோசித்து வையுங்கள். பலவீனத்தைச் சொல்லும்போது, அதைச் சரிசெய்ய நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதையும் சேர்த்துச் சொல்லுங்கள்.

Interview

9. கடைசியில் "ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா?" என்று கேட்டால், "இல்லை" என்று சொல்லாமல், வேலை அல்லது நிறுவனம் குறித்து ஏதேனும் ஒரு நல்ல கேள்வியைக் கேளுங்கள்.

Interview

10. நேர்முகத் தேர்வு முடிந்ததும், நேர்காணல் செய்தவருக்குப் புன்னகையுடன் நன்றி கூறி விடைபெறுவது உங்கள் நற்பண்பை வெளிப்படுத்தும்.

Interview
cockroach-spray
உங்கள் வீட்டில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள்: இந்த 10 பொருட்களை உடனே மாற்றுங்கள்!