சி.ஆர்.ஹரிஹரன்
புளிசாதம் செய்யும் போது இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டால், சாதம் ஒட்டாமல் வரும்.
எந்த வகை புலாவ் என்றாலும், அரிசியை பத்து முதல் பன்னிரண்டு நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக் கூடாது.
உப்பு ஜாடியில் இரண்டு பச்சை மிளகாய்களை போட்டு வைத்தால், நீர் கசியாது.
சாம்பாருக்கு பொடி அரைக்கும் போது குண்டு மிளகாயுடன் கார மிளகாயையும் கலந்து அரைத்தால், சாம்பார் பொடி ருசி அள்ளும்.
சுண்டலை தாளித்து இறக்கியபின், இரண்டு தேக்கரண்டி அவலை வறுத்துப் பொடி செய்து தூவினால், சுண்டல் சூப்பர் சுவையில் இருக்கும்.
சாம்பாரில் உப்பு அதிகமாகி விட்டதா? கவலை வேண்டாம். ஒரு முள்ளங்கியை தோல் சீவி நறுக்கி சாம்பாரில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டால், அதிகமாக உள்ள உப்பின் சுவை குறைந்து விடும்.
ரசம் செய்து இறக்கி வைக்கும் போதுதான் கொத்துமல்லி இலை சேர்க்க வேண்டும். அப்போதுதான் ரசம் மணமாக இருக்கும்.
கீரையை சமைக்கும் போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்தால், அதன் சத்து முழுவதும் கிடைக்கும்.
குலோப் ஜாமூனுக்கு பாகு வைக்கும் போது சமஅளவு சர்க்கரை, தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
தோசை வார்க்கும் போது ரொட்டி போல் வந்தால், சாதம் வடித்த கஞ்சியை சிறிதளவு தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால், பூப்போல் மிருதுவாய் வரும்.