நடேஷ் கன்னா
வெள்ளரிக்காய் தினசரி சாப்பிட்டு வந்தால் நீர் இழப்பை தடுக்கலாம் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். தயிர் சேர்த்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்தாகும்
கற்பூரவள்ளி இலை ஆப்பிளை விட 42 மடங்கு அதிக சத்து கொண்டது. இந்த இலையை தினசரி மூன்று இலைகள் பச்சையாக சாப்பிட்டால் உடலில் உள்ள கொழுப்புகள் குறையும்
ஒரு சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு கொஞ்சம் தண்ணீர் குடித்தால் ஜலதோஷம் பறந்துவிடும்
வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். மேலும் கொழுப்பு சேராது.
கொய்யாப் பழத்தை மிளகுத்தூள் தொட்டு சாப்பிட்டால் இருமல் குறையும் நுரையீரலில் உள்ள சளி இறங்கிவிடும்.
பப்பாளி இலைச்சாறு அருந்தி வந்தால் கல்லீரல் நோய் குணமாகும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும்.
கேரட் துருவலுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால் கண்பார்வை தெளிவாகும் உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும்.
முருங்கைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும் மூலநோய் குணமாகும் ரத்தசோகை நீங்கிவிடும்.
தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். குழந்தைகளுக்கு வளர்ச்சிக்கு சிறந்த உணவாகும்.
சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடல் புற்று நோய் குணமாகும். எலும்புகளுக்கு நல்லது.
வால்நட் சாப்பிட்டால் விந்தணுக்களை உற்பத்தி செய்யும் மூளை திறனுக்கு நல்லது. இதயத்திற்கு நல்ல கொழுப்பை அளிக்கிறது.