நான்சி மலர்
ஆந்திரா காரமான உணவுகளுக்கு மட்டும் பெயர் போனதல்ல. சுவைமிக்க வித்தியாசமான இனிப்பு பலகாரங்களுக்கு பெயர் பெற்றது. ஆந்திர இனிப்புகளில் நெய் மற்றும் வெல்லத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும். அவற்றைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.
Paper sweet: மெல்லிய காகிதம் போன்ற இனிப்பு. அரிசி தாள்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனை "காகித இனிப்பு" என்று அழைக்கலாம்.
பல்நாடு பால்கோவா: ஆந்திராவில் 'பல்நாடு' என்னும் இடத்தில் செய்யப்படும் இந்த பால் கோவா மிகவும் பிரபலம்.
கவ்வாலு: சிப்பிகள் போன்ற வடிவத்தில் மைதா மாவைக் கொண்டு செய்யப்படும் இனிப்பு வகை.
Bobbatlu: நம்முடைய 'பருப்பு போளி' போன்ற இனிப்பு வகை. மைதா அல்லது கோதுமை மாவுக்குள் பருப்பு வெல்லம் பூரணம் வைத்து திரட்டப்படும் பலகாரம்.
அரிசெலு: நம் ஊரின் 'அதிரசம்' போன்று பச்சரிசி மாவு, வெல்லம் சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும். சங்கராந்தி பண்டிகையின் போது இது முக்கிய இடம் பிடிக்கும். எள் அல்லது கசகசா தூவி, நல்ல மொறுமொறுப்பாகச் செய்வார்கள்.
சுன்னூண்டலு: ஆரோக்கியமான உளுந்து உருண்டை. கருப்பு உளுந்து, நெய், வெல்லம் சேர்த்து உருட்டப்படும் லட்டு. இது உடலுக்கு நல்ல வலிமையை தரும்.
சந்திரகலா: பிறை நிலா வடிவம் கொண்டது. இதன் உள்ளே கோவா வைத்து மடிக்கப்பட்டு எண்ணெயில் பொரித்து எடுத்து பாகில் ஊற வைத்து எடுக்க வேண்டும்.
Boorelu: ஆந்திராவின் 'சுழியம்' என்று சொல்லலாம். பருப்பு வெல்லம் கலந்த பூரணத்தை அரிசி மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். அனைத்து பூஜைகளிலும் நைவேத்தியமாக படைக்கப்படும்.
பால்காயலு: இது மாவு மற்றும் பால் சேர்த்து செய்யப்படும் சிறிய உருண்டைகள். இவை மொறுமொறுப்பாகவும், லேசான இனிப்புச் சுவையுடனும் இருக்கும். கோதாவரி மாவட்டங்களில் இது மிகவும் பிரபலம்.