எண்ணெய் அதிகம் குடிக்காமல் வடை பொரிக்க... இதோ ஒரு ஈஸி ட்ரிக்!

சி.ஆர்.ஹரிஹரன்

வத்தல், வடாம் பொரிக்கும்போது குறுகிய குழி வாணலியைப் பயன்படுத்தினால் எண்ணெய் குறைவாகத்தான் செலவாகும்.

வத்தல், வடாம்

சோமாஸ் செய்யும்போது பூரணத்தில்  சிறிது நெய் விட்டுப் பிசிறி அடைத்தால் பூரணம் உதிராது.

சோமாஸ்

சேமியாவை நெய்யில் மிதமான சூட்டில் வறுத்து மிக்ஸியில் நைஸாகப் பொடித்து மைசூர்பாகுபோல் செய்தால் சுவையான சேமியாபாகு தயார்.

சேமியா

வெங்காய சாம்பார் செய்யும்போது தேங்காயுடன் வெங்காயத்தை வதக்கி அரைத்து குழம்பில் சேர்க்க சாம்பார் சுவையோ சுவை.

வெங்காய சாம்பார்

உளுந்து அப்பளம் நான்கு எடுத்து அடுப்பில் சுட்டுத்தூளாக்கி அதில் தயிரைச் சேர்க்கவும். திடீர் தயிர் பச்சடி ரெடி.

அப்பளம்

பதார்த்தங்களில் உள்ள கரண்டிகளை ஒன்றிலிருந்து  மற்றொன்றுக்கு மாற்றாதீர்கள். இதனால் சமைத்த பலகாரங்கள் பல சமயம் கெட்டுவிடும்.

கரண்டிகள்

வடை, போண்டா, பஜ்ஜி பொரிக்கும்போது சிறிது உப்பு போட்டால் அதிகமாக எண்ணெய் குடிக்காது.

போண்டா

வெண்டைக்காய்  வதக்கும்போது சிறிது எலுமிச்சைச் சாறு ஊற்றி வறுத்தால் சுவை கூடும்.

வெண்டைக்காய்

ஏலக்காயை கேஸ் அடுப்பு எரியும்போது கேஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் சிறிது நேரம் வைத்திருந்து பொடி செய்தால் பொடி செய்வது எளிதாக இருக்கும்.

ஏலக்காய்

குருமா நீர்த்துவிட்டால் அத்துடன் ஒரு கைப்பிடி நூடுல்ஸைப் போட்டுக்கொதிக்க வைத்தால் குருமா கெட்டியாவது மட்டுமல்லாமல் சுவையும் அதிகரிக்கும்.

நூடுல்ஸ்

இரண்டு பங்கு பாசிப்பருப்பு, ஒரு பங்கு கடலைப்பருப்பு என்று அரைத்து செய்யும் மைசூர்பாகு செம டேஸ்ட்டாக இருக்கும்.

மைசூர்பாகு
Ant
எறும்புகளின் 10 வியக்க வைக்கும் ரகசியங்கள்!