சி.ஆர்.ஹரிஹரன்
Cooking tips
1. தோசை மாவு: மாவு நீர்த்துப்போனால், பாலில் 2 ஸ்பூன் ரவை மற்றும் அரிசி மாவு கலந்து சேர்த்தால் மாவு கெட்டியாகும், புளிப்பும் குறையும்.
2. பாகற்காய் பொரியல்: ஊறவைத்த கடலைப்பருப்பை உதிர்த்து பாகற்காய் பொரியலில் சேர்த்தால் கசப்பு குறையும்.
3. காய்கறி வேகவைக்க: காய்கறிகளை வேகவைக்கும்போது சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
4. புளியோதரை: பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் வறுத்த கடலை சேர்த்தால் புளியோதரை கூடுதல் சுவையுடன் இருக்கும்.
5. புளித்த மாவு: தோசை மாவு புளித்துவிட்டால், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து ஊத்தப்பம் செய்தால் சுவையாக இருக்கும்.
6. மணமான சாம்பார்: வறுத்த கடலைப்பருப்பு, மிளகாய் வத்தல், தேங்காய்த் துருவலுடன் ஒரு வெங்காயம் சேர்த்து அரைத்து ஊற்றினால் சாம்பார் ருசியும் மணமும் கூடும்.
7. முள்ளங்கி பொரியல்: கொப்பரை சீவலில் முள்ளங்கியைத் துருவி பொரியல் செய்தால் பார்க்க கோஸ் பொரியல் போல அழகாக இருக்கும்.
8. பொங்கல்: பொங்கலில் தண்ணீர் அதிகமானால், சிறிது ரவையை வறுத்துச் சேர்த்தால் சரியான பதத்திற்கு வந்துவிடும்.
9. ரசம்: தாளிக்கும்போது பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலையை ரசத்தில் போடாமல், தாளிக்கும் எண்ணெயில் சேர்த்தால் நல்ல மணமும் ருசியும் கிடைக்கும்.
10. வெண்டைக்காய் பொரியல்: வறுத்த வேர்க்கடலையைப் பொடித்து வெண்டைக்காய் பொரியலில் சேர்த்தால் சுவை சிறப்பாக இருக்கும்.