நான்சி மலர்
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதித்ததும், ஓட்ஸை சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
கோதுமை மாவு மற்றும் அரிசி மாவுடன் உப்பு, சீரகம், வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். தோசைக் கல்லில் ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு மொறுமொறுப்பாக சுட்டு எடுக்கலாம்.
பிரெட் துண்டுகளை சிறிய சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம், தக்காளி வதக்கி மசாலாப் பொடிகளைச் சேர்க்கவும். லேசாகத் தண்ணீர் தெளித்து, நறுக்கிய பிரெட் துண்டுகளைப் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.
அவலை லேசாகத் தண்ணீர் தெளித்து உதிரியாகப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நிலக்கடலை வறுத்து எடுக்கவும். அதே எண்ணெயில் கடுகு, வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள் வதக்கி, பின் அவல் மற்றும் உப்பு சேர்த்து கிளறி பரிமாறவும்.
ராகி சேமியாவைத் தண்ணீரில் 2 நிமிடங்கள் நனைத்து தண்ணீரை வடிகட்டவும். பின் இட்லி பாத்திரத்தில் வைத்து 5 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும். கடாயில் தாளிப்புப் பொருட்களை வதக்கி, வேகவைத்த சேமியா மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
சப்பாத்திகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கி, முட்டையை உடை ஊற்றி உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பொடிமாஸ் செய்யவும். இப்போது நறுக்கிய சப்பாத்தி துண்டுகளை அதில் சேர்த்து நன்றாகப் பிரட்டி சூடாகப் பரிமாறவும்.
ஒரு பாத்திரத்தில் ரவை, அரிசி மாவு, தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவைக் காட்டிலும் சற்று நீர்க்க கரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், மல்லித்தழை சேர்த்து 10 நிமிடங்கள் கழித்து கல்லில் ஊற்றி எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிப்புப் பொருட்களைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக மசிய வதக்கவும். மசாலாப் பொடிகளைச் சேர்த்து எண்ணெய் பிரிந்ததும், வடிச்ச சாதத்தைச் சேர்த்து மென்மையாகக் கிளறி இறக்கவும்.
பாஸ்தாவைத் தண்ணீரில் உப்பு மற்றும் சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து வடிகட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, காய்கறிகள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது வதக்கவும். கரம் மசாலா, உப்பு சேர்த்து, வேகவைத்த பாஸ்தாவைச் சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.
குக்கரில் 1 ஸ்பூன் நெய் விட்டு சீரகம், வெங்காயம், தக்காளி மற்றும் காய்கறிகளை வதக்கவும். கழுவி வைத்துள்ள கோதுமை ரவை மற்றும் பாசிப் பருப்பைச் சேர்த்து, 3 கப் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு எடுக்கவும்.