நான்சி மலர்
1/11. கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாகப் பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றைத் தடுக்கும் எளிய தீர்வுகளை காணலாம்.
2/11. உடல் சூடு- இளநீர், மோர் மற்றும் அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டும்.
3/11. நீர்ச்சத்து குறைபாடு- தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து மிக்க பழங்களைச் சாப்பிட வேண்டும்.
4/11. அம்மை நோய்கள்- சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்; பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.
5/11. மஞ்சள் காமாலை- காய்ச்சிய நீரைப் பருக வேண்டும்; வெளியிடங்களில் சுகாதாரமற்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
6/11. டைபாய்டு- உணவு மற்றும் குடிநீரின் சுத்தத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
7/11. சருமப் பாதிப்புகள்- மெல்லிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்; தினமும் இருமுறை குளிக்க வேண்டும்.
8/11. உணவு நச்சு- கோடையில் உணவு சீக்கிரம் கெட்டுவிடும் என்பதால், எப்போதும் சமைத்த உடனே சூடாகச் சாப்பிட வேண்டும்.
9/11. கண் நோய்கள்- அடிக்கடி கண்களைக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்; வெயிலில் செல்லும் போது சன்கிளாஸ் அணியலாம்.
10/10. சிறுநீரகத் தொற்று- போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்; சிறுநீரை அடக்கக் கூடாது.
11/11. வெப்ப வாதம்- மதிய வெயிலில் (12 PM - 4 PM) வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.