கிரி கணபதி
காளான்கள் பார்ப்பதற்கு அழகாகவும் சாப்பிட மிகவும் சுவையாகவும் இருக்கும். ஆனால், இயற்கை தரும் எல்லா காளான்களும் பாதுகாப்பானவை அல்ல.
1. விஷக் காளான்கள் பார்ப்பதற்குச் சிவப்பு, மஞ்சள் என மிகவும் கவர்ச்சியான நிறங்களில் இருக்கும். பாதுகாப்பான சாப்பிடக்கூடிய காளான்கள் பெரும்பாலும் வெள்ளை அல்லது பழுப்பு நிறத்திலேயே காணப்படும்.
2. நல்ல காளான்கள் இயற்கையான மண் வாசனையுடன் மிகவும் இதமாக இருக்கும். ஆனால் விஷக் காளான்களில் இருந்து அழுகிய நாற்றம் அல்லது கெமிக்கல் போன்ற ஒருவித கெட்ட வாடை வீசும்.
3. ஒரு காளானை வண்டுகளோ அல்லது நத்தைகளோ சாப்பிட்டிருந்தால் அது பெரும்பாலும் விஷமற்றதாகவே இருக்கும். எந்தப் பூச்சியுமே நெருங்காத காளான்களை நாம் கண்டிப்பாகத் தொடவே கூடாது.
4. காளானின் குடைக்கு அடியில் இருக்கும் செதில்கள் வெள்ளையாக இருந்தால் அவை விஷத்தன்மை கொண்டவையாக இருக்க வாய்ப்புள்ளது. உண்ணக்கூடிய காளான்களின் செதில்கள் பெரும்பாலும் பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும்.
5. விஷக் காளான்களின் தண்டுப் பகுதியில் ஒரு சிறிய குடை போன்ற வளையம் அமைந்திருக்கும். நல்ல காளான்களில் பெரும்பாலும் இந்த மாதிரியான வளையங்கள் காணப்படாது.
6. பாதுகாப்பற்ற விஷக் காளான்களின் அடிப்பகுதி ஒரு சிறிய கிண்ணம் அல்லது பந்து போல வீங்கி இருக்கும். சாதாரண காளான்களின் தண்டுப் பகுதி தொடக்கம் முதல் முடிவு வரை ஒரே அளவில் நேராக இருக்கும்.
7. காளானின் குடையின் மீது வெள்ளை நிறத்தில் புள்ளிகள் அல்லது செதில்கள் இருந்தால் அது மிகவும் ஆபத்தானது. இவை நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய கொடிய விஷம் கொண்ட வகையைச் சேர்ந்தவை.
8. சில காளான்களை லேசாகக் கிள்ளிப் பார்த்தால் அதிலிருந்து பால் போன்ற ஒரு திரவம் வெளியேறும். அப்படிப்பட்ட திரவம் வெளிவரும் காளான்களை உணவாக உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
9. காளானை வெட்டும்போது அதன் உட்புறம் உடனடியாக நீலம் அல்லது மஞ்சள் நிறமாக மாறினால் அது ஆபத்தானது. பாதுகாப்பான காளான்களை வெட்டும்போது அவ்வளவு சீக்கிரத்தில் நிறம் மாறாது.
10. காடுகளிலும் ரோட்டோரங்களிலும் முளைத்துக் கிடக்கும் காளான்களை நாமாகப் பறித்துச் சாப்பிடுவது பெரும் ஆபத்தாகும். எனவே சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் தரமான காளான்களை வாங்கிச் சாப்பிடுவதே எப்போதுமே பாதுகாப்பானது.
காளான் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என்றாலும், சரியான காளானைத் தேர்ந்தெடுப்பது அதைவிட முக்கியம். சந்தேகம் வந்தால் அதைச் சாப்பிடாமல் தூக்கி எறிந்துவிடுவதே நம் உயிருக்குச் செய்யும் மிகப்பெரிய நன்மையாகும்.