மழைக் காலத்திற்கு ஏற்ற பெஸ்ட் ட்ரிங்க்! கிரீமியான ஹாட் சாக்லேட் வீட்லயே ஈஸியா செய்றது எப்படி?

நான்சி மலர்

  1. Hot chocolate recipe தேவையான பொருட்கள் : கெட்டியான பால் (Milk), கோகோ பவுடர் (Cocoa Powder), சர்க்கரை மற்றும் டார்க் சாக்லேட் துண்டுகள் (Dark Chocolate) ஆகியவை மூலப்பொருட்கள் ஆகும்

Hot chocolate recipe | AI image

2. தண்ணீர் கலக்காத முழு கொழுப்புள்ள பால் (Full Cream Milk) பயன்படுத்தினால் மட்டுமே ஹாட் சாக்லேட் கிரீமியாகவும் டேஸ்டாகவும் வரும்.

Hot chocolate recipe | AI image

3. ஒரு பாத்திரத்தில் மிதமான சூட்டில் பாலை ஊற்றி, அதனுடன் கோகோ பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு விஸ்க் (Whisk) கொண்டு நன்றாக கலக்க வேண்டும்.

Hot chocolate recipe | AI image

4. சுவை இன்னும் அதிகரிக்க, கலவை சூடானதும் சிறு துண்டுகளாக நறுக்கிய சாக்லேட் (Dark or Milk Chocolate) சேர்த்து அது கரையும் வரை கிளறவும்.

Hot chocolate recipe | AI image

5. காபி ஷாப் ஸ்டைலில் திக்காக வர, ஒரு டீஸ்பூன் சோள மாவை (Corn Flour) சிறிதளவு குளிர்ந்த பாலில் கரைத்து கொதிக்கும் கலவையில் ஊற்றி ஒரு நிமிடம் கொதிக்க விடலாம்.

Hot chocolate recipe | AI image

6. இறக்குவதற்கு முன் சிறிதளவு வெண்ணிலா எசென்ஸ் (Vanilla Extract) அல்லது ஒரு சிட்டிகை பட்டைத் தூள் (Cinnamon Powder) சேர்த்தால் நறுமணம் அருமையாக இருக்கும்.

Hot chocolate recipe | AI image

7. பால் ஊற்றிய பிறகு அடுப்பை மிதமான தீயிலேயே வைத்துக்கொள்ள வேண்டும்; அதிகமாக கொதித்தால் சாக்லேட்டின் சுவை மாறிவிடும்.

Hot chocolate recipe | AI image

8. பரிமாறும் முன் இதன் மேலே மார்ஷ்மெல்லோஸ் (Marshmallows), விப்கிரீம் (Whipped Cream) அல்லது சாக்லேட் சிரப் ஊற்றி பரிமாறலாம்.

Hot chocolate recipe | AI image

9. சாக்லேட் பிரியர்களுக்கு காபி ஃபிளேவர் பிடித்திருந்தால், இந்த கலவையுடன் ஒரு சிட்டிகை இன்ஸ்டன்ட் காபி தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

Hot chocolate recipe | AI image

10. சர்க்கரைக்கு பதிலாக பிரவுன் சுகர் அல்லது கண்டன்ஸ்டு மில்க் (Condensed Milk) சேர்த்தால் ஹாட் சாக்லேட்டின் சுவை மிகவும் ரிச்சாக இருக்கும்.

Hot chocolate recipe | AI image
Dinner recipes | AI image
வேலைக்குச் செல்லும் பெண்களா நீங்கள்? இந்த ஈஸி டின்னர் ரெசிபிகள் உங்களுக்காகத்தான்!