பஞ்சு போன்ற இட்லி வேண்டுமா? மாவு அரைக்கும் போது இதைச் செய்து பாருங்கள்!

கிரி கணபதி

சரியான முறைகளைப் பின்பற்றினால் வீட்டிலேயே அருமையான மிருதுவான இட்லிகளை வார்க்கலாம்.

Soft Idli Tips

1. தரமான இட்லி அரிசியைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். இதுவே இட்லியின் மென்மைக்கு முக்கியக் காரணமாக அமைகிறது.

Soft Idli Tips

2. முழு உளுந்தைச் சரியான அளவில் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் மாவு நன்கு பொங்கி மிருதுவாகக் கிடைக்கும்.

Soft Idli Tips

3. அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாகக் கழுவி ஊறவைப்பது நன்று. குறைந்தபட்சம் 4 மணி நேரமாவது ஊற வேண்டும்.

Soft Idli Tips

4. உளுந்துடன் சிறிது வெந்தயம் சேர்த்து ஊறவைக்கலாம். இது மாவுக்கு கூடுதல் மணத்தையும் சுவையையும் கொடுக்கும்.

Soft Idli Tips

5. உளுந்தை மிகவும் மென்மையாக அரைத்து எடுக்க வேண்டும். அரிசியை கொரகொரப்பாக அரைப்பது சிறந்தது.

Soft Idli Tips

6. மாவு அரைக்கும்போது குளிர்ந்த நீரைப் பயன்படுத்தவும். இதனால் மாவு அரைபடும்போது சூடாவது எளிதில் தவிர்க்கப்படும்.

Soft Idli Tips

7. மாவு அரைத்தவுடனே தேவையான கல் உப்பு சேர்க்க வேண்டும். கைகளால் நன்கு கலக்குவது மாவு புளிக்க உதவும்.

Soft Idli Tips

8. மாவு புளிப்பதற்கு 8 மணி நேரம் தேவை. தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப இந்த நேரம் மாறுபடும்.

Soft Idli Tips

9. மாவு பொங்கி வரும் என்பதால் பெரிய பாத்திரத்தைப் பயன்படுத்தவும். இது மாவு கீழே சிந்தாமல் பாதுகாக்கும்.

Soft Idli Tips

10. இட்லி பானையில் தண்ணீர் கொதித்த பின் தட்டுகளை வைக்கவும். மிதமான தீயில் வேகவைப்பது சரியான முறையாகும்.

Soft Idli Tips

இந்தச் சிறு குறிப்புகளை கவனத்தில் கொண்டால் மிருதுவான இட்லிகள் இனி நீங்களும் செய்யலாம்.

Soft Idli Tips
Chair
பழைய பிளாஸ்டிக் நாற்காலியா? தூக்கி போடாதீங்க, இதை ட்ரை பண்ணுங்க!