கே.எஸ்.கிருஷ்ணவேனி
தேன் கெட்டுப் போகாத ஒரு அரிய உணவாகும். பண்டைய எகிப்திய கல்லறைகளில் தேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை நன்றாக பேக் செய்து காற்றுப் புகாதவாறு சேமித்தால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்பும் அது உண்ணக்கூடியதாகவே இருக்கும்.
தேனில் ஹைட்ரஜன் பெராக்ஸைடை உற்பத்தி செய்யும் என்சைம்கள் உள்ளதால், இது இயற்கையான பாதுகாப்பாளராக செயல்படுகிறது.
2000 ஆண்டுகளுக்கும் மேலாக மணலுக்கு அடியில் இருந்த போதிலும் கிங் டுட்டின் கல்லறையில் காணப்பட்ட சீல் செய்யப்பட்ட தேன் கெடாமல் இன்னும் உண்ணக்கூடிய வகையில் தான் உள்ளது.
300க்கும் மேற்பட்ட தேன் வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் அவற்றிற்கென தனித்துவமான சுவை நிறம் கொண்டவை.
எந்த மூலத்திலிருந்து தேன் சேகரிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அதன் சுவை, நிறம் மாறுபடும்.
ஒரு தேன்கூடு ஒரு வருடத்தில் சராசரியாக 30 முதல் 100 பவுண்டுகள் வரை தேனை உருவாக்கும். இதற்கு 800 தேனீக்களின் கூட்டு பங்களிப்பு தேவைப்படுகிறது.
தேனீக்களுக்கு காதுகள் இல்லை. அவை சிறப்பு அசைவுகள் மூலம் ஒன்றை ஒன்று தொடர்புக் கொள்கின்றன.
தேனிக்கள் ஒரு எல்பி தேனை உருவாக்க 55 ஆயிரம் மைல்களுக்கு மேல் பறக்க வேண்டும். தேனீக்களுக்கு 4 இறக்கைகள் உண்டு. மேலும் இவை 6 கால்கள் கொண்டவை.
தேனீக்களுக்கு ஐந்து கண்கள் உண்டு. இவை குறைந்தது 150 மில்லியன் ஆண்டுகளாகத் தேனை உற்பத்தி செய்து வருகின்றன.
ஒரு கூட்டிற்கு ஒரு ராணி தேனீ மட்டுமே இருக்கும். இவை இரண்டு மூன்று ஆண்டுகள் வாழ்கின்றன. ராணி தேனி ஒரு நாளைக்கு 2,000 முட்டைகள் வரை இடும்.
தேன் ஒருபோதும் கெட்டுப் போவதில்லை. அவற்றை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
தேனில் விட்டமின்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் உள்ளன. தேனில் கொழுப்பு கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் கிடையாது.
தேன் மற்றும் தேன் மெழுகு பல தோல் கிரீம்கள், உதட்டு சாயம் மற்றும் கை லோஷன்களின் அடிப்படைகளை உருவாக்குகின்றன.
ராணித் தேனீீ மற்ற தேனீக்களைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இதன் கொடுக்கு மற்றவற்றின் கொடுக்கிலிருந்து வேறுபட்டு இருக்கும்.