ஸ்கூட்டர் ஓட்டும் பெண்களுக்கு சில பயனுள்ள டிப்ஸ்!

ஆர்.ஜெயலெட்சுமி

புது வண்டி வாங்கியபின் 30 நாளில் அல்லது 750 கிலோமீட்டர் ஓடியதுமே கண்டிப்பாக முதல் சர்வீஸுக்கு விடவேண்டும். அடுத்த 30 நாட்களில் மீண்டும் ஒரு சர்வீஸ் செய்ய வேண்டும். இதேபோல் தொடர்ச்சியாக ஏழு சர்வீஸ் அவசியம்.

New Scooter

சுலபமாக ஸ்டார்ட் ஆகாவிட்டால் 'சோக்'கைப்போட்டு ஸ்டார்ட் செய்து உடனே ஆஃப் செய்துவிட வேண்டும்.

Scooter Maintanence Tips

முடிந்தவரை சில்லறையாக ஆயில் போடாதீர்கள். டூவீலருக்கு என்றேவிற்கும் ஒரே பிராண்ட் ஆயிலைபோடுவது இன்ஜினுக்கு நல்ல லைஃப் தரும். அடிக்கடி பிராண்ட் மாற்றினால் கிரேடு மாறிவிடும்.

Scooter Maintanence Tips

இரவில் வண்டியை நிறுத்தும்போது ஞாபகமாக லைட் சுவிட்சை ஆஃப் பண்ணி வைக்கவும். இல்லை என்றால் பல்பு பியூஸ் ஆகிவிடும்.

Scooter Maintanence Tips

வாரத்துக்கு ஒரு முறையாவது செயினில் ஆயில் போட வேண்டும். ஏதேனும் டப்பா மூடியில் ஆயிலை எடுத்துக்கொண்டு பழைய டூத் பிரஷை தொட்டு செயினில் வைத்து வீலைச் சுற்றினால் எளிதாக ஆயில் பரவும்.

Scooter Maintanence Tips

வாராவாரம் ஏர் செக் பண்ணுவது நல்லது. தினமும் துடைப்பது அவசியம். அப்படி செய்தால் துருப்பிடிக்காது.

Scooter Maintanence Tips

ஒவ்வொரு முறை சர்வீஸுக்கு விடும்போதும் பேட்டரியை செக் பண்ணி டிஸ்டில் வாட்டர் லெவல் சரியாக இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள வேண்டும் (குறிப்பாக ஸ்கூட்டி கைனடிக் ஹோண்டா).

Scooter Maintanence Tips

கூடுமானவரை இரண்டு பிரேக்கையும் சேர்த்தே பயன்படுத்த வேண்டும். இதில் முன் பிரேக்கை மட்டும் லேசாகப் பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் வண்டி சாயக் கூடும். பிரேக் பிடித்தப்படி ஓட்டினால் இஞ்ஜினுக்கு வேலை அதிகரிக்கும்.

Scooter Maintanence Tips

வண்டியில் செல்லும்போது எக்காரணம் கொண்டும் ஒரு கையால் ஓட்டுவதோ கால்களை ஃபுட்போர்டை விட்டு தொங்கவிட்டுப் போவதோ கூடாது.

Scooter Maintanence Tips

திருப்பத்தில் செல்லும்போது வண்டியின் ஸ்பீடைக் குறைத்து செல்ல வேண்டும். இல்லாவிட்டால் வழுக்கக்கூடும். மழை நாளில் மெதுவாக ஓட்ட வேண்டும் வெயில் நாளில் சூடு தாங்காமல் பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதால் ஸ்பீடை ஒரே லெவலில் ஓட்டுவது நல்லது.

Scooter Maintanence Tips

ஸ்பீடை திடீர் திடீர்னு கூட்டிக் குறைக்காமல் ஒரே ஸ்பீடில் 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை போனால் நல்ல மைலேஜ் கிடைக்கும். திடீர் திடீர் என ஆக்சிலேட்டரை கூட்டிக் குறைப்பது, பிரேக் போடுவது, மூன்று பேர் ஓவர் லோடு போவது போன்ற விஷயங்களில் மைலேஜ் கிடைப்பது குறையும்.

Scooter Maintanence Tips

கிளட்ச் கேபிள், பிரேக் கேபிள், ஹேண்ட் லிவர்ஸ் ஸ்டார்டிங் கேபிள்,  திரட்டில் கேபிள் ஆகியவற்றுக்கு அடிக்கடி ஆயில் போட வேண்டும். அப்போதுதான் வண்டி ஷார்ப்பாக இருக்கும்.

Scooter Maintanence Tips

பெண்கள் சேலையையோ முந்தானையையோ துப்பட்டாவையோ  பறக்க விடக்கூடாது. துப்பட்டாவை மார்பின் குறுக்காக மடித்து கால்களிடையே கிடக்குமாறு முடிச்சு போட்டுக்கொள்வது நல்லது. விபத்தைத் தவிர்க்க இது உதவும்.

Scooter Maintanence Tips

இவையெல்லாவற்றிற்கும் மேலாக கட்டாயம் ஹெல்மெட் அவசியம். இதனால் எதிர்பாராத வகையில் வண்டியிலிருந்து கீழே விழுந்துவிட்டால் கூட உயிரிழக்கும் ஆபத்தைத் தவிர்க்க முடியும்.

Scooter Maintanence Tips
Platypus & Echidna