பத்தே நிமிடங்களில் பேக்கரி ஸ்டைல் கேரளா நேந்திரம் சிப்ஸ்! அப்புறம் ஏன் காசு கொடுத்து வாங்குறீங்க?

நான்சி மலர்

கேரளா ஸ்டைல் மொறுமொறுப்பான நேந்திரம் சிப்ஸ் செய்வதற்கான எளிய வழிமுறை இதோ:

Kerala Nendran Chips

1/10. சிப்ஸ் செய்வதற்கு நல்ல பச்சையாக, கெட்டியாக இருக்கும் நேந்திரங்காய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நேந்திரம் பழத்தைப் பயன்படுத்தக் கூடாது.

Kerala Nendran Chips | credit AI Image

2/10. நேந்திரங்காயின் காம்பு மற்றும் அடிப்பகுதியை வெட்டிவிட்டு, கத்தியால் நீளவாக்கில் லேசாகக் கீறி தோலை உரிக்க வேண்டும்.

Kerala Nendran Chips | credit AI Image

3/10. தோல் நீக்கிய காய்களை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து15 நிமிடங்கள் ஊற வைக்கவும். இது காயின் பிசுபிசுப்பு மற்றும் கறையை நீக்கும்.

Kerala Nendran Chips | credit AI Image

4/10. தண்ணீரில் இருந்து காய்களை எடுத்து, ஒரு சுத்தமான பருத்தி துணியால் துடைத்து, ஈரப்பதம் முற்றிலும் இல்லாதவாறு நன்றாகக் காய வைக்க வேண்டும்.

Kerala Nendran Chips | credit AI Image

5/10. ஒரு சிறிய கிண்ணத்தில் 4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு உப்பு மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

Kerala Nendran Chips | credit AI Image

6/10. பாரம்பரிய கேரளா சுவை கிடைக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. வாணலியில் எண்ணெயைச் ஊற்றி மிதமான தீயில் நன்றாகச் சூடாக்கவும்.

Kerala Nendran Chips | credit AI Image

7/10. எண்ணெய் சூடானதும், சிப்ஸ் சீவும் கட்டையைக் கொண்டு நேரடியாக எண்ணெயிலேயே காய்களை மெலிதான வட்டங்களாகச் சீவலாம்.

Kerala Nendran Chips | credit AI Image

8/10. சிப்ஸ் எண்ணெயில் வெந்து கொண்டிருக்கும் போது, நாம் கலந்து வைத்துள்ள உப்பு-மஞ்சள் கரைசலில் இருந்து 1 அல்லது 2 டீஸ்பூன் தண்ணீரை நேராக எண்ணெயில் தெளிக்க வேண்டும்.

Kerala Nendran Chips | credit AI Image

9/10. உப்புத் தண்ணீர் தெளித்தவுடன் எண்ணெய் பயங்கரமாகச் சலசலக்கும். சிப்ஸ் நன்றாக வெந்து, கிரிஸ்ப்பாக மாறும் போது அந்த ஓசை முற்றிலும் அடங்கிவிடும்.

Kerala Nendran Chips | credit AI Image

10/10. ஓசை அடங்கியதும் சிப்ஸை எண்ணெயில் இருந்து அரித்து எடுத்து, ஒரு டிஷ்யூ பேப்பரில் பரப்பி வைக்கவும். ஆறிய பிறகு காற்றுப் புகாத டப்பாவில் சேமித்தால் பல வாரங்கள் மொறுமொறுப்பாக இருக்கும்.

Kerala Nendran Chips | credit AI Image
new dishes out of leftover food | credit AI Image
வீட்டில் எஞ்சிய உணவுகளை ‘சுடச்சுட’ புது அவதாரமாக மாற்றுவது எப்படி? சிம்பிள் ட்ரிக்ஸ்!