லட்டு ஏன் பவுடர் ஆகுது? மைசூர்பாகு ஏன் கல்லு மாதிரி மாறுது? தெரிஞ்சா ஷாக் ஆவீங்க!

நான்சி மலர்

Deepavali sweets

1. பாகின் பதம் (லட்டு): லட்டுக்குச் சர்க்கரை பாகு வைக்கும் போது, அது கம்பிப் பதம் (ஒற்றைக் கம்பிப் பதம்) தாண்டிவிட்டால், லட்டு உருட்ட வராமல் உதிர்ந்து போய்விடும்.

Deepavali sweets | Gemini image

2. சரியான ஈரப்பதம்: லட்டு கலவை மிகவும் வறண்டுவிட்டால் உருண்டையாகப் பிடிக்க முடியாது. அப்போது சிறிதளவு சூடான பால் அல்லது சர்க்கரைத் தண்ணீர் தெளித்துப்பிடிக்க வேண்டும்.

Deepavali sweets | Gemini image

3. மாவு மற்றும் நெய்யின் அளவு: கடலை மாவு மற்றும் நெய்யின் விகிதம் சரியாக இருக்க வேண்டும். மாவை வதக்கும் போது நெய் குறைவாக இருந்தால் லட்டு உதிர ஆரம்பிக்கும்.

Deepavali sweets | Gemini image

4. சூட்டுடன் உருட்டுவது: லட்டு கலவை மிகவும் ஆறிவிட்டால் அது உதிரும். வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போதே கைகளில் நெய் தடவி உருண்டைகளைப்பிடிக்க வேண்டும்.

Deepavali sweets | Gemini image

5. மைசூர்பாகு பாகு பதம்: மைசூர்பாகு கல் போல் மாறுவதற்கு முக்கியக் காரணம் பாகு முற்றிவிடுவதுதான். இது நுரைத்து வரும் சரியான கட்டத்தில் இறக்க வேண்டும்.

Deepavali sweets | Gemini image

6. நெய் மற்றும் எண்ணெய் வெப்பநிலை: மைசூர்பாகு செய்யும்போது ஊற்றும் நெய் மற்றும் எண்ணெய் சரியான சூட்டில் (மிதமான சூடு) இருக்க வேண்டும். மிகவும் கொதிக்கும் நெய்யை ஊற்றினால் அது இறுகிவிடும்.

Deepavali sweets | Gemini image

7. மாவு வறுக்கும் முறை: மைசூர்பாகு செய்ய கடலை மாவை நெய்யில் சேர்த்து வறுக்கும் போது கட்டி தட்டாமல் கைவிடாமல் கிளற வேண்டும். இல்லையெனில் கடினமாகிவிடும்.

Deepavali sweets | Gemini image

8. நெய் ஊற்றும் முறை: ஒரே நேரத்தில் எல்லா நெய்யையும் ஊற்றாமல், கரண்டி கரண்டியாகச் சூடான நெய்யைச் சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். இது மென்மையைத் தரும்.

Deepavali sweets | Gemini image

9. பாத்திரம் தேர்வு: மைசூர்பாகு மற்றும் லட்டு செய்ய அடிகட்டியான பாத்திரங்களைப் பயன்படுத்துவது அடிப்பிடிக்காமல் இருக்கவும், பதம் மாறாமல் இருக்கவும் உதவும்.

Deepavali sweets | Gemini image

10. இறக்கும் பதம்: கலவை பாத்திரத்தின் ஒட்டாமல் சுருண்டு வரும் பக்குவத்தில் இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டினால் பஞ்சு போன்ற மென்மையான மைசூர்பாகு ரெடி!

Deepavali sweets | Gemini image
Deepavali legiyam | Gemini image
தீபாவளி பலகாரங்களை இஷ்டம் போல சாப்பிடுங்க... இந்த ஒரு ஸ்பூன் லேகியம் போதும்!