எஸ்.ராஜம்
காதில் கம்மல் போடும் இடத்தில் புண் ஏற்பட்டிருந்தால், கடுக்காய், மஞ்சள் இரண்டையும் அரைத்துப் பூசி வர, புண் ஆறிவிடும்.
பிரண்டையை தணலில் வாட்டி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் தொடர் விக்கல் நிற்கும்.
நெய்யில் வறுத்த உலர் திராட்சை பழங்களை காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டு, பசும் பால் குடித்து வந்தால், வறட்டு இருமல் நீங்கும். ரத்தம் சுத்தமாகும்.
நான்கு சிறிய வெங்காயத்தை பச்சையாக மென்று சாப்பிட்டு விட்டு, ஒரு டம்ளர் வெந்நீர் குடித்தால், ஜலதோஷம் நீங்கிவிடும்.
முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், நீரிழிவு கட்டுப்படும். குடல் நோய்களும் தீரும் உயர் ரத்த அழுத்தமும் கட்டுப்படும்.
ஒரு ஸ்பூன் நெல்லிக்காய்சாறுடன் சிறிது தேன் கலந்து தினமும் சாப்பிட்டால், கண்பார்வை கூர்மையடையும். நீரிழிவு, இரத்த சோகை, சளி போன்ற வியாதிகள் தீரும்.
மணத்தக்காளி கீரையை அரைத்து சாறு எடுத்து, ஒரு டம்ளர் மோரில் கலந்து ஒரு வாரம் குடித்து வந்தால், வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்கிவிடும்.
அகத்திக் கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் உடலில் சேர்ந்துள்ள பித்தம் வெளியேறிவிடும்.
நெற்றியில் குங்குமம் சாந்து வைத்த இடம் சில சமயம் கறுத்துவிடும். துளசி இலைகளை தேங்காய்ப் பால்விட்டு அரைத்து தடவி வர, பழைய நிறத்துக்கு வந்துவிடும்.
கோவைக்காயை பச்சையாக மென்று விழுங்கினால், நாக்கில் ஏற்படும் சூட்டுக் கொப்புளங்கள் ஆகிவிடும்.