நான்சி மலர்
Cooking tips:
1. சமையலில் உப்பு அதிகமானால், உருளைக்கிழங்குத் துண்டுகள், தக்காளி, சிறிய கோதுமை மாவு உருண்டை அல்லது சிறிது தேங்காய்ப்பால் சேர்த்தால் அதிகப்படியான உப்பை உறிஞ்சிவிடும்.
2. சமையலில் காரம் கூடினால் சிறிது கெட்டித் தயிர், புதிய பால், நெய், எலுமிச்சை சாறு அல்லது ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்கலாம்.
3. சமையலில் புளிப்பு அதிகமானால், இனிப்பு அல்லது காரத்தைச் கூட்டுவது நல்லது; சிறிது சர்க்கரை, வெல்லம், தேங்காய் துருவல் அல்லது தேங்காய்ப்பால் சேர்த்துச் சரிசெய்யலாம்.
4. சமையலில் இனிப்பு தூக்கலாக இருந்தால் சிறிது எலுமிச்சை சாறு, புளிப்புத் தயிர் அல்லது கூடுதல் காரம் சேர்த்துச் சமன் செய்யலாம்.
5. குழம்பு நீர்த்து போனால், சிறிது வறுத்த கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு அல்லது அரிசி மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றிக் கொதிக்க வைத்தால் குழம்பு தடிமனாகும்.
6. உணவு அடிப்பிடித்து விட்டால், உணவை உடனே வேறு பாத்திரத்திற்கு மாற்றிவிடவும். சிறிது நெய், தயிர் அல்லது தேங்காய்ப்பால் சேர்த்தால் கருகிய வாசனை மறையும்.
7. சாதம் குழைந்து விட்டால், சாதத்தின் மீது குளிர்ந்த நீரை ஊற்றி உடனடியாக வடித்து, அகலமான தட்டில் பரப்பி ஃபேன் காற்றில் உலர வைத்தால் சாதம் உதிரியாகும்.
8. தோசை அல்லது பஜ்ஜி மாவில் கட்டிகள் இருந்தால், அதை ஒருமுறை மிக்ஸியில் போட்டு லேசாக 'பல்ஸ்' (Pulse) செய்து எடுத்தால் மாவு மென்மையாகும்.
9. குழம்பின் மேலே மிதக்கும் எண்ணெய்யை ஐஸ் உருண்டைகளை கரண்டியில் வைத்து மேலே வைத்தால், எண்ணெய் உறைந்து கரண்டியில் ஒட்டிக்கொள்ளும்; அதை இலகுவாக நீக்கிவிடலாம்.
10. காய்கறிகளில் கசப்பு அதிகமாக இருந்தால் சிறிது உப்பு, புளி, அல்லது நெய் சேர்த்து வதக்கினால் கசப்புத் தன்மை பெருமளவு குறையும்.