கத்தரிக்கோல் மழுங்கி விட்டதா? இதோ சில முக்கிய குறிப்புகள்!

சி.ஆர்.ஹரிஹரன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவோடு வெங்காயம் சேர்த்து வதக்கி, உப்பு, புளி, மிளகாயோடு செய்யும் துவையல் மிகவும் ருசியாக இருக்கும்.

Thuvaiyal

புட்டு செய்யும்போது பச்சை வாசம் வராமல் இருக்க, புட்டுக்கு அரைத்தமாவை  வாணலியில் வறுத்து வேகவைக்க வேண்டும்.

Puttu

ஊறுகாய்களை வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒருமுறை போட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகப்படுத்தும்போது மிகக்குறைந்த அளவு உப்பு போட்டாலே போதும்.

Pickle

காய்கறி நறுக்கும் கத்தியின் முனை மழுங்கி இருந்தால், ஒரு பீங்கான் கப்பை கவிழ்த்துப் போட்டு, அந்தப் பகுதியில் நன்றாக கத்தியை திருப்பித்திருப்பித் தேய்த்தால் கத்தி பழையபடி கூராகி விடும்.

Knife

பொரித்த ஜாமூன்களை சூடான சர்க்கரைப் பாகில் உடனே சேர்க்காமல் நன்கு ஆறிய பின் சேர்த்தால்  ஜாமூன்கள் உடையாமலும், கரையாமலும் இருக்கும்.

Gulab jamun

தயிர்வடைக்கு மாவு அரைக்கும்போது சிறிது தயிரை விட்டு அரைத்தால் வடை மிருதுவாக இருக்கும்.

Thayir Vadai

கட்லெட் செய்ய ரொட்டித்தூள் இல்லையா? அரிசியைப் பொரித்துத் தூளாக்கி பயன்படுத்தலாம்.

Cutlet

கொத்தமல்லி, பச்சைமிளகாய், உப்பு, புளி ஆகியவற்றை மையாக அரைத்து பிரட் ஸ்லைஸில் ஒருபுறம் தடவி நெய் விட்டு டோஸ்ட் செய்தால் தனிச்சுவையைத் தரும்.

Bread toast

கத்தரிக்கோல் மழுங்கி விட்டதா? கத்தரிக்கோலால் அலுமினிய ஃபாயில் பேப்பரை சிறிய துண்டுகளாக வெட்டினால் முனை கூராகிவிடும்.

Scissor

முந்திரி, பாதாமை ஒரு டீஸ்பூன் நெய்யில் வறுத்துப் பொடி செய்து கேழ்வரகு அல்லது கம்புப் புட்டில் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

puttu

இனிப்பு பலகாரங்களுக்காக சர்க்கரைப்பாகு தயாரிக்கும் போது சில துளி எலுமிச்சைச் சாறு சேர்த்தால் பாகு இலகுவாக இருக்கும்.

Paagu

கூட்டுக்கு உளுந்து தாளிப்பதைவிட வேர்க்கடலையை வறுத்து, ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டால் கூட்டு சுவையாக இருக்கும்.

Koottu
Cooking
சமையல் வேலையை எளிமையாக்கும் 10 சூப்பர் டிப்ஸ் இதோ!