சி.ஆர்.ஹரிஹரன்
வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ போன்றவற்றை சமைக்கும்போது தேங்காய் எண்ணையை பயன்படுத்தினால் சுவை கூடும்.
மோர் புளித்துப்போய்விட்டால் கவலை வேண்டாம். மோர்க்கூழ், மோர்க்களி, மோர்க்குழம்பு என்று அதை பயன்படுத்தலாம்.
வெள்ளைக் கொண்டைக்கடலையை ஊற வைத்து வத்தக்குழம்பில் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
காய்கறிகள் வைத்து ரோஸ்ட் செய்யும்போது மிளகாய்ப்பொடிக்கு பதிலாக ரசப்பொடியையும் மேலே தூவலாம். ரசம் வாசனையே அலாதி தான்.
கடையிலிருந்து வாங்கிவந்த பாகற்காயை அப்படியே வைத்தால் அவை சீக்கிரம் பழுத்து விடும். பாகற்காயை இரண்டு, மூன்றாக வெட்டி ஒரு கவரில் போட்டு வைத்தால் சீக்கிரம் பழுத்துப் போகாது.
அச்சு வெல்லத்துக்குப் பதில் பனை வெல்லம் சேர்த்து சர்க்கரைப் பொங்கல் செய்தால் வாசனை தூக்கலாக இருக்கும்.
வீட்டில் எண்ணெய் குறைவாக இருந்தால் வாழைக்காய் பொடிமாஸ், உருளைக்கிழங்கு பொடிமாஸ் போன்ற எண்ணெய் அதிகம் தேவைப்படாத தொடுகறி செய்யலாம்.
பிரட்டை துண்டுகளாக நறுக்கி அதில் மைதா, உப்பு, தயிர், சோடா மாவு சேர்த்துப் பிசைந்து சுவையான பட்டூரா செய்யலாம்.
சர்க்கரைப் பொங்கல் வேகும்போது ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றினால் சுவை மிகுந்து இருக்கும்.
சாதத்துடன் பிசைந்து சாப்பிட கறிவேப்பிலைத் துவையல், கொத்த மல்லித் துவையல் போன்றவை மிகவும் சுவையாக இருக்கும்.
எந்தக் காய்கறியையும், பழத்தையும் சமைக்க எடுத்துக் கொள்ளும் முன் ஒரு முறைக்கு, இரண்டு முறை நன்கு கழுவி சுத்தம் செய்துவிட வேண்டும்.