உங்களுக்கு ஏன் கெட்ட கனவுகள் வருகின்றன? இந்த 10 விஷயங்கள் தான் காரணம்!

கிரி கணபதி

நல்லா தூங்கிட்டு இருக்கும்போது திடீர்னு ஒரு கெட்ட கனவு வந்து அலறி அடிச்சிட்டு எழுந்திரிச்சிருக்கீங்களா? எல்லாருக்கும் இந்த அனுபவம் இருக்கும். சில சமயம் ஒரு கெட்ட கனவு நாள் முழுக்க நம்ம மனச பாதிக்கும். இந்த கெட்ட கனவுகள் ஏன் வருது? இதுக்கு பின்னாடி என்னென்ன காரணங்கள் இருக்கு?

Bad Dream

1. மன அழுத்தம் மற்றும் கவலைகள்:

நம்ம வாழ்க்கையில அதிகமான வேலைப்பளு, குடும்ப பிரச்சனைகள், இல்ல எதிர்காலத்த பத்தின கவலைகள்னு மனசுல அதிகமா அழுத்தம் இருக்கும்போது, அது கனவுகளா வெளிப்படும். மனசுல இருக்கற பயமும், பதட்டமும் கெட்ட கனவா மாறி நமக்கு தொந்தரவு கொடுக்கும்.

Bad Dream

2. கடந்த கால கசப்பான அனுபவங்கள்:

ஒருத்தரோட வாழ்க்கையில நடந்த பெரிய விபத்து, ஒருத்தரோட இழப்பு, இல்ல பயங்கரமான அனுபவங்கள் - இதெல்லாம் மனசுல ஆழமா பதிஞ்சிருக்கும். அந்த பாதிப்புகள் கனவுகளா வந்து பயமுறுத்தும். இது போஸ்ட்-டிராமாடிக் ஸ்ட்ரெஸ் டிஸார்டர் (PTSD)-னு சொல்வாங்க.

Bad Dream

3. தாமதமா சாப்பிடுறது:

நீங்க நைட் ரொம்ப லேட்டா, அதுவும் காரமான, அதிக எண்ணெய்ச் சத்து உள்ள உணவுகளை சாப்பிட்டீங்கன்னா, அது செரிமானத்துக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். வயிறுல ஏற்படும் தொந்தரவுகள் தூக்கத்தை கெடுத்து, கெட்ட கனவுகள வர வைக்கும்.

Bad Dream

4. சில மாத்திரைகள்:

சில மருந்துகள், குறிப்பா மன அழுத்தத்துக்கான மாத்திரைகள், ரத்த அழுத்த மாத்திரைகள் போன்ற சில மருந்துகளின் பக்கவிளைவுகளால கெட்ட கனவுகள் வரலாம். நீங்க புதுசா ஒரு மாத்திரை எடுத்துக்கிட்டப்ப கெட்ட கனவுகள் வந்தா, டாக்டர்கிட்ட கேக்குறது நல்லது.

Bad Dream

5. போதுமான தூக்கம் இல்லாதது:

நிறைய வேலை இருக்குனு தூக்கத்தை குறைச்சீங்கனா, அதுவும் கெட்ட கனவுகளுக்கு ஒரு காரணம். சரியான தூக்கம் இல்லைன்னா, நம்ம மூளைக்கு ஓய்வு கிடைக்காது, அது கனவுகளை ஒழுங்குபடுத்துறதுல கோளாறு ஏற்படும்.

Bad Dream

6. உடம்பு சரியில்லாதப்போ:

உங்களுக்கு காய்ச்சல், சளி, இல்ல வேற ஏதாவது உடல்நலக் குறைபாடு இருக்கும்போது, அதுவும் உடம்புல அதிக வெப்பத்தை உண்டாக்கி, மூளையை பாதிக்கும். அப்போ ரொம்ப தெளிவான, அதே சமயம் கெட்ட கனவுகள் வர வாய்ப்பு இருக்கு.

Bad Dream

7. வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள்:

வேற ஊருக்கு மாறுறது, புது வேலைக்கு போறது, இல்ல வாழ்க்கையில ஒரு பெரிய மாற்றம் ஏற்படும்போது, அது மனசுக்கு புதுவிதமான அழுத்தத்தை கொடுக்கும். இந்த அழுத்தம் கெட்ட கனவுகளா வெளிப்படும்.

Bad Dream

8. ஆல்கஹால் மற்றும் போதைப்பொருட்கள்:

ஆல்கஹால் மற்றும் போதைப்பொருட்கள் உங்க தூக்க சுழற்சியை (Sleep Cycle) பாதிக்கும். இது ஆழ்ந்த தூக்கத்த தடுத்து, உங்களுக்கு கெட்ட கனவுகள உருவாக்கும்.

Bad Dream

9. பயமுறுத்தும் விஷயங்களை பார்க்குறது:

படுக்கைக்கு போறதுக்கு முன்னாடி திகில் படம் பார்க்குறது, இல்ல பயங்கரமான கதைகள் படிக்கிறது போன்றவை உங்க மனசுல ஒரு பயத்தை உருவாக்கும். அந்த பயமே கனவா வந்து உங்கள பயமுறுத்தும்.

Bad Dream

10. மனநல பிரச்சனைகள்:

மன அழுத்தம் (Depression), பதட்டக் கோளாறு (Anxiety Disorder) போன்ற சில மனநலப் பிரச்சனைகள் உள்ளவங்களுக்கு கெட்ட கனவுகள் வர அதிக வாய்ப்பு இருக்கு. இது அந்தப் பிரச்சனைகளோட ஒரு அறிகுறியா இருக்கலாம்.

Bad Dream
tylor
அளவற்ற அழகு: உலகின் 10 அரிய, அழகிய வைரங்கள்!