வயிற்று புண்ணை போக்கும் 'மணத்தக்காளி கீரை சூப்'!

கல்கி டெஸ்க்

மணத்தக்காளி கீரையில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மணத்தக்காளி செடியில் குறிப்பாக இலை, பழம் இவற்றில் பல நன்மைகள் உள்ளது.

Manathakkali keerai Soup | Img Credit: Amazon

சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் நன்மை தருவதாகும்.

Manathakkali keerai Soup | Img Credit: Freepik

வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு.

Manathakkali keerai Soup | Img Credit: Freepik

இதனை செய்யும் முறையும் சூப் செய்ய தேவையான பொருட்களும் பின் வருமாறு.

Manathakkali keerai Soup | Img Credit: Chitra's food book

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளி கீரை - 1 கட்டு, சின்ன வெங்கயம் – 15, வர மிளகாய் – 3, சீரகம் - 1 டீஸ்பூன், தேங்காய் பால் - 1 கப், மஞ்சள் - 1 டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு

Manathakkali keerai Soup | Img Credit: Komalas vegemart

சூப் செய்யும் முறை:

முதலில் மணத்தக்காளி கீரையை சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு இலையை பறித்து கொள்ள வேண்டும். கிளை தண்டுகளை சிறிதாக வெட்டி கொள்ள வேண்டும். பின் வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

Manathakkali keerai Soup | Img Credit: Subbus kitchen

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வரமிளகாய், சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிகொள்ள வேண்டும்.

Thalippu

அடுத்து, மஞ்சள் தூள் மற்றும் கீரை மற்றும் கீரை தண்டினை சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

Manathakkali keerai Soup | Img Credit: Traditionally morden food

பின், தேங்காய் பாலை ஊற்றி நன்றாக கிளறினால் மணத்தக்காளி சூப் ரெடி. இதனை மாலை நேரத்தில் பருகுவது நல்லது.

-நிதிஷ் குமார் யாழி

Manathakkali keerai Soup | Img Credit: Raks kitchen
first Hindu temple in Abu Dhabi