அபுதாபியில் அமைந்துள்ள முதல் இந்து கோயில்!

கண்மணி தங்கராஜ்

இந்தியாவின் அயோத்தியில் ராமர் கோயில் பல கொண்டாட்டங்களுக்குப் மத்தியில் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அபுதாபியில் இந்து கோவில் கட்டப்பட்டுள்ளன.  இது முதன்முதலாவதாக அபுதாபியில் கட்டப்பட்டுள்  இந்து கோவில் ஆகும்.

first Hindu temple in Abu Dhabi

சுமார் 700 கோடி ரூபாய்  செலவில் ஒரு பெரிய கோயிலாக இது  கட்டப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தான் இந்த கோயிலை திறந்து வைத்துள்ளார். தற்போது இந்தக் கோயில் பொதுமக்களின்  தரிசனத்திற்காக திறக்கப்பட்டிருக்கிறது.

first Hindu temple in Abu Dhabi

அபுதாபியில்  ‘ஷேக் சயீத்’ நெடுஞ்சாலையில் அபு முரேகா என்னும் இடத்தில்  சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த அற்புதமான கோயிலானது போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷரா புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா (பிஏபிஎஸ்) என்னும் அமைப்பினரால் கட்டப்பட்டுள்ளது.

first Hindu temple in Abu Dhabi

நாகரா கட்டடக்கலை பாணியில், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட 18 லட்சம் செங்கற்கள் மற்றும் 1.8 லட்சம் கன மீட்டர் மணற்கற்களால் கட்டப்பட்டது இந்த பரந்து விரிந்த  கோயில்.

first Hindu temple in Abu Dhabi

அபுதாபியில் அமைந்துள்ள இக்கோயிலானது இந்தியாவின் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் கட்டடக்கலையை அடிப்படையாக வைத்து கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

first Hindu temple in Abu Dhabi

இந்த கோயிலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஏழு அமீரகங்களைக் குறிக்கும் ஏழு கோபுரங்கள் அமைந்துள்ளன.

first Hindu temple in Abu Dhabi

ஏழு கோபுரங்களிலும் ராமர், சிவன், ஜெகந்நாதர், கிருஷ்ணர், சுவாமிநாராயணா, திருப்பதி பாலாஜி மற்றும் ஐயப்பன் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் உள்ளன.

first Hindu temple in Abu Dhabi

காண்போரின் கண்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் ஒட்டகங்களின் சிற்பங்களும், துபாயின் தேசிய பறவையான ஃபால்கனும் மிக அழகான சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

first Hindu temple in Abu Dhabi

கோயில் முழுவதும் பல்வேறு சிற்பங்களால் ஆனது. ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இந்தியாவின் 15 கதைகளைத் தவிர, மாயன், அஸ்டெக், எகிப்திய, அரபு, ஐரோப்பிய, சீன மற்றும் ஆப்பிரிக்க நாகரிகங்களின் கதைகளும் கோயிலில் சித்தரிக்கப்பட்டுள்ளன.

first Hindu temple in Abu Dhabi

கோயிலின் கட்டடக்கலை வடிவமானது முற்றிலும் வித்தியாசமானது. இந்து வேதங்களான ‘ஷில்பி’ மற்றும் ‘ஸ்தபத்ய’ போன்ற சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டைய கட்டுமானப் பாணியில் தான் இந்த அற்புதமான கோயில் கட்டப்பட்டுள்ளது.

first Hindu temple in Abu Dhabi
curry leaves | Image Credit: pothunalam