நான்சி மலர்
1/10. ரசம் என்ற சொல் தமிழ் மொழியில் இராசம் என்று அழைக்கப்படுகிறது. இது "சாறு" அல்லது "சார்பொருள்" எனப் பொருள்படும்.
2/10. ஆரம்பக் காலத்தில் ரசம் ஒரு உணவுப் பண்டமாகப் பார்க்கப்படவில்லை; அது ஒரு மூலிகை கஷாயமாகவே பயன்படுத்தப்பட்டது.
3/10. 16-ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட மன்னரின் இளவரசருக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட, காய்ச்சலைக் குணப்படுத்தும் உணவைச் சமைப்பவருக்குப் பரிசு வழங்குவதாக அறிவித்தார் மன்னர்.
4/10. கருணாஸ் என்ற அரண்மணை சமையல்காரர், காட்டுப் புளி, மிளகு, சீரகம், மஞ்சள் ஆகியவற்றை நீரில் கொதிக்க வைத்து ஒரு காரசாரமான, புளிப்புச் சாற்றைத் தயாரித்தார். இதைப் பருகிய இளவரசர் விரைவில் குணமடைந்தார்.
5/10. நாயக்கர் ஆட்சிக்காலத்தில் மதுரைக்குக் குடிபெயர்ந்த சௌராஷ்டிர சமூக மக்களும் ரசத்தின் பரிணாம வளர்ச்சிக்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்தனர்.
6/10. பழங்காலத் தமிழ் ரசத்தில் புளியும் மிளகும் மட்டுமே முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டன.
7/10. பாரம்பரியத் தமிழ் சமையலில், ஈயச் சொம்பு என்று அறியப்படும் இந்த உலோகப் பாத்திரத்தில் ரசத்தை மெதுவாகக் கொதிக்க வைக்கும் போது, அதற்குரிய பிரத்யேக சுவை கிடைக்கிறது.
8/10. வைணவப் பாரம்பரியத்தில், ரசத்தை வெறும் உணவாகக் கருதாமல் சாற்றமுது என்று மரியாதையுடன் அழைப்பர். இது இறைவனுக்குப் படைக்கப்படும் முக்கிய நெய்வேத்தியங்களில் ஒன்றாகும்.
9/10. மெட்ராஸில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகளுக்கு இந்த "மிளகு-தண்ணி" மிகவும் பிடித்துப் போனது. அவர்கள் அதை " முலகுடானி" (Mulligatawny) என்று மாற்றி, உலகப் புகழ்பெற்ற சூப் வகையாக மாற்றினர்.
10/10. இன்றும் ஜலதோஷம், இருமல், செரிமானக் கோளாறு என எது வந்தாலும், உடனே நினைவுக்கு வரும் முதல் வீட்டு வைத்தியம் சுடச்சுட வைக்கும் ரசம் தான்.