சமச்சா போதுமா? சமையலறை பொருட்கள பாதுகாக்க வேண்டாமா? இதோ சில டிப்ஸ்!

மகாலெட்சுமி சுப்ரமணியன்

கத்தியை உபயோகித்ததும் அடிக்கடி அலம்பாமல் ஈரத்துணியால் துடைத்து விட்டு வைக்க, கூர் மழுங்காமல் ஷார்ப்பாக நீண்ட நாள் உழைக்கும்.

kitchen knife | Img credit: AI Image

சாப்பர், வெஜிடபிள் கட்டரை உபயோகித்த பின் ஈரமில்லாமல் துடைத்து வைக்க வாடையின்றி இருக்கும்.

vegetable chopper | Img credit: AI Image

அனைத்து விதமான கத்தி, அரிவாள், அரிவாள் மனையை உபயோகித்ததும் துடைத்து விட்டு தேங்காய் எண்ணைய் தடவி வைக்க துரு ஏறாமல், கூர் மழுங்காமல் நீண்ட நாள் உழைக்கும்.

knife sharpen | Img credit: AI Image

மிக்ஸி உபயோகம் முடிந்ததும் சுவிட்சை ஆன் - இல் வைக்காமல் ஒயரை சுருட்டாமல் அப்படியே வைத்து உபயோகிக்க அதன் தரம் நீண்ட நாள் நிலைக்கும்.

mixer grinder | Img credit: AI Image

மிக்ஸி ஜார்களை வாரமிருமுறை வெதுவெதுப்பான நீரில் கழுவி துடைத்து விட்டு ஜாரை நிமிர்த்தே வைக்க வேண்டும். ஜார் ரப்பரை ஃப்ரீசரில் வைத்து எடுக்க அதன் லைஃப் நன்றாக இருக்கும்.

mixer jar | Img credit: AI Image

தேங்காய் துருவியதும், துருவியை ஈரத் துணியால் துடைத்து விட்டு கவர் பண்ணி வைக்க பூச்சி, எறும்பு தொல்லை இருக்காது.

Coconut

கூர் மழுங்கிய பொருட்களை உப்பு கொண்டோ, உப்புத் தாள் கொண்டோ தேய்த்து விட்டு உபயோகிக்க ஷார்ப்பாக இருக்கும்.

knife | Img credit: AI Image

நான்ஸ்டிக் பாத்திரங்களை அடுக்கும் போது டிஷ்யூ பேப்பரோ அல்லது மெல்லிய துணி வைத்தோ அடுக்க கீறல் விழாமல் இருக்கும்.

nonstick cookware | Img credit: AI Image

பாத்திரங்களை தனித்தனியே கவிழ்த்து வைக்க கீறல் விழாது.

cookware | IMg credit: AI Image

பாத்திரம் வாங்கும்போது கனமான பிராண்டட் பொருட்களையே வாங்க அதன் தரம் நீண்ட நாள் நிலைத்து நிற்கும்.

cookware | Img credit: AI Image

மண்பாண்ட சமையல் முடிந்ததும், உணவை பாத்திரத்துக்கு மாற்றி விட்டு, மண்பாண்டங்களை, ஆறியதும், ஊற விட்டு கழுவ உணவு பொருட்கள் பிடித்துக் கொள்ளாமல் சுத்தமாக கழுவ முடியும்.

mud pot cooking | Img credit: AI Image

புழங்காத பித்தளை பாத்திரங்களை ஷோ பீஸாகவோ, வேறு உபயோகமான பொருளாகவோ மாற்றிக் கொள்ள அவற்றை பயன்படுத்திய திருப்தி கிடைக்கும்.

brass utensils showpieces | Img credit: AI Image

கண்ணாடி, பீங்கான் பாத்திரங்களை ஸ்பான்ஜ் கொண்டு கழுவி துடைத்து காயவிட்டு வைக்க கறை கீறல் இன்றி பளபளப்பாக இருக்கும்.

Glass kitchen items | Img credit: AI Image

டீ கப், காபி மக்கில் கறையை நீக்க வினிகர் கொண்டு கழுவிட  கறை நீங்கி சுத்தமாக இருக்கும்.

coffee cup cleaning | Img credit: AI Image
10 healthy pickles
நாக்கு செத்துப்போச்சா? சப்புக் கொட்டிச் சாப்பிட 10 ஊறுகாய் வகைகள்!