நான்சி மலர்
Kanhwa green tea, காஷ்மீரின் பிரபலமான பானமான இது, கிரீன் டீயுடன் இந்திய மசாலாக்கள், குங்குமப்பூ, ஏலக்காய், பாதாம் ஆகியவை கலந்து தயாரிக்கப்பட்டிருக்கும்.
பஞ்சாபில் Lassi மிகவும் பிரபலமான பானமாகும். இதில் சேர்க்கப்படும் தயிரை எருமை பாலில் இருந்து தயாரிக்கிறார்கள். இதில் ஏலக்காய், சர்க்கரை சேர்த்து கிரீமியான லஸ்ஸி தயாரிக்கப்படுகிறது.
Solkadhi மகாராஷ்டிராவில் மிகவும் பிரபலமான பானமாகும். இதை Kokum பழம், தேங்காய் பால், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து தயாரித்தால் புளிப்பான பானம் கிடைக்கும். உணவு உண்ட பிறகு ஜீரணத்திற்கு இந்த பானம் கொடுக்கப்படும்.
Pannah குஜராத்தில் மிகவும் பிரபலமான பானம். வெயில் காலங்களில் பன்னா குடிப்பதற்கு ஏற்றதாக இருக்கும். மாம்பழத்தின் சதை, மிளகுத்தூள், ஏலக்காய், உப்பு ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
சட்டீஸ்கரில் பிரபலமான Mahua என்னும் பானம் Mahua மரத்தில் இருக்கும் பூக்களை நொதிக்க வைப்பதின் மூலமாக தயாரிக்கப்படுகிறது. இதில் மருத்துவ குணங்கள் உள்ளன. இதை பண்டிகை காலங்களில் தயாரித்து அருந்துவார்கள்.
Sattu sharbat பீகாரில் மிகவும் பிரபலமாக அருந்தப்படும் பானமாகும். வறுத்த கொண்டைக்கடலை மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் புரதம் அதிகமாக இருக்கிறது. இதை அருந்தினால் காலை உணவே தேவையில்லை. உடலுக்கு நல்ல சக்தியை கொடுக்கும்.
Thandai உத்திரபிரதேசத்தில் மிகவும் பிரபலமாகும். இதில் பால், ரோஜா இதழ், பெருஞ்சீரகம், ஏலக்காய், குங்குமப்பூ, பாதாம், சர்க்கரை ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இது நல்ல எனர்ஜி டிரிங்காக கருதப்படுகிறது.
சிக்கீமில் தயாரிக்கப்படும் chhang பானம் நேபாளில் இருந்து இங்கு வந்ததாகும். இதை நொதிக்க வைத்த மில்லட்டில் இருந்து தயாரிக்கிறார்கள். ஆறுமாதம் வரை இந்த பானம் கெடாமல் இருக்கும். மக்கள் இதை குளிர்க்காலத்தில் அருந்த விரும்புவார்கள்.
ஜல்ஜீரா என்பது சீரகம், கருப்பு உப்பு, புளி, புதினா மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றின் கலவையுடன் தயாரிக்கப்படும் காரமான பானமாகும். ஜல்ஜீரா பெரும்பாலும் பண்டிகைகள் போது பசியைத் தூண்டும் அல்லது புத்துணர்ச்சியூட்டும் பானமாக வழங்கப்படுகிறது.
ஜிகர்தண்டா தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக அருந்தப்படும் பானமாகும். இது பால், பாதாம் பிசின், நன்னாரி சர்பத் போன்றவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. வெயில் காலங்களில் மக்கள் இதை விரும்பி அருந்துவார்கள். ஜிகர்தண்டா மதுரையில் மிகவும் பிரபலமாகும்.