நான்சி மலர்
உணவுக்கும், மனநிலைக்கும் நேரடித் தொடர்பு உண்டு. 'Mood Swings' கையாள, ரத்தத்தில் சர்க்கரை அளவைச் சீராக வைக்க, மகிழ்ச்சியைத் தூண்ட, ஹார்மோன்களை சுரக்கச் செய்ய உணவுகள் (Happy foods) அவசியம்.
டார்க் சாக்லேட்டில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.
வாழைப்பழத்தில் இருக்கும் Vitamin B6 மற்றும் பொட்டாசியம் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் Serotonin அளவைச் சீராக வைக்க உதவுகின்றன.
தயிரில் உள்ள 'புரோபயாட்டிக்ஸ்' பதற்றத்தைக் குறைக்க உதவும். குடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தால் மனநிலை நன்றாக இருக்கும்.
மெக்னீசியம் குறைபாடு இருந்தால் எரிச்சல் மற்றும் தூக்கமின்மை ஏற்படும். பாதாம் பருப்புகள் மெக்னீசியம் அதிகமாக இருக்கிறது.
ஓட்ஸ் நாள் முழுவதும் உங்கள் ஆற்றல் சீராக இருக்க உதவுகிறது. இதனால் தேவையற்ற கோபம் வராது.
மீனில் உள்ள Omega-3 fatty acids மனச்சோர்வை எதிர்த்துப் போராடும் வல்லமை கொண்டது.
முட்டையில் உள்ள Choline, வைட்டமின் D நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி மனநிலையை மேம்படுத்தும்.
Folate குறைபாடு இருந்தால் மனச்சோர்வு ஏற்படும். பருப்பு உணவுகள் அதை ஈடுகட்டும்.
புளுபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மன அழுத்தத்தினால் ஏற்படும் செல்கள் பாதிப்பைத் தடுக்கின்றன.
கீரைகளில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகம் இருப்பதால், இது சோர்வை நீக்கி உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.